பொருந்திய பின்பகுதியில் (பகைவரை) தகித்து வருத்துகின்ற ஒளி பொருந்திய வேற்படையையுடைய முருகப்பெருமானுடைய யாவரும் விரும்பத்தக்க தணிகையம்பதியின் பெருமையை. (வி - ம்.) காந்தம் ஆறு சங்கிதையுடையது. அவை, சனத்குமார சங்கிதை, சூதசங்கிதை, பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கரசங்கிதை, சூரசங்கிதையாம். (17) | கன்ன லுங்கனியு மேத குஞ்சுவைய கண்டு மாரமுது மேசறப் | | பன்னி யெம்பரிவ றுத்தி முற்றுபரி பாக மின்மையி னயர்த்துளேம் | | இன்னு மன்னதனை யாங்க ளுய்ந்திட வெடுத்தி யம்பிதுவி யங்கொளல் | | அன்மை தக்கவர்த காத வர்க்கருளி னறிவ ளித்தருள னீதியே. |
(இ - ள்.) கன்னற்பாகும், களியினிரதமும், மேன்மை பொருந்திய சுவையையுடைய கற்கண்டும், அரிய தேவாமிர்தமும் போல எங்கள் குறை நீங்குமாறு இனிமையாகச் சொல்லி எங்கள் வருத்தத்தை யறுத்தாய். நிறைந்த மலபரிபாகம் இன்மையாலே (தேவரீர் கூறிய பொருளை) மறந்துள்ளேம். (ஆதலால்) இனியு மொருமுறை அத்தணிகை மான்மியத்தினை யாங்களுய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளுவாய். (இங்ஙனம் யாங்கள் விண்ணப்பம் செய்யு) மிஃது (தேவரீரை) ஏவல்கொளும் தன்மையலவாம். (ஞான ஒழுக்கங்களால்) தகுதியுடையார் (அவைகளால்) தகுதியில் லார்க்கு அருளினாலே அறிவினைக் கொடுத்தருளுதல் முறையேயாகும். (வி - ம்.) ஏசற - கவலைநீங்க. அறுத்தி - அறுத்தாய். பரிபாகம் - பக்குவம்; பரி: உபசர்க்கம். இயம்பு - இயம்புவாய். வியங்கொளலன்மை - ஏவல்கொள்ளுந் தன்மையலவாகும். (18) | என்று மாதவ ரிரந்து வேண்டலு மிலங்கு சூதமுனி மொழியுமால் | | நன்று மாதவ நவிற்றி யாணவ நலித்து மே தகைமை பூண்டுளீர் | | இன்ற யர்த்தன மெனக்கி ளந்தமை யெமக்கு மேதகைநி றுத்தலொன் | | றன்றி வையக மளித்த லொன்றுள மமைத்தி டாவிழைவொன் றாகுமே. |
(இ - ள்.) இங்ஙனம் கூறிப் பெரிய தவத்தையுடைய முனிவர்கள் யாசித்து விரும்ப விளங்குகின்ற சூத முனிவன் சொல்வான். பெரிதுந்தவத்தைச்செய்து ஆணவமலத்தை நீக்கி மேன்மையை யடைந்துள்ள நீங்கள் இப்பொழுதயர்த்தோமெனக் கூறுதல் எனக்கு மேன்மையை நிறுவுதலொன்றாம். அல்லாமல் உலகத்தை உய்யக்கோடலொன்றாகும். (அத்தணிகை மான்மியத்தை) உள்ளத்தின் கண்ணமையச் செய்யாத ஒரு விருப்பமாகாது. (வி - ம்.) நவிற்றி - செய்து. நலிந்து - கெடுத்து. எனக்கும் மேன்மையை நிறுத்தலொன்றாம், அல்லது உலகத்தையுய்யக் கோடலொன்றாம். இது உள்ளத்தின்கண் ணமைத்திடா விழைவொன்றாகாது. உள்ளத்தினமைக்கும் விழைவேயாம் என்க. (19) | இகன்மி குத்தகொடி முட்கு டம்பையி னிருந்த கோகில மழப்பறழ் | | தகுசி றைத்துணை முளைத்த லுஞ்சிறை தணந்து சேணொழியு மாறுபோற் |
|