பக்கம் எண் :

166தணிகைப் புராணம்

 றொகுமு டற்சிறை துரந்து வீடணுகு சூழ்ச்சி பன்முறையும் வேட்டலின்
 உகுபி றப்பினும தேபி றப்புமை யுயிர்த்து ளார்மகவு யிர்த்துளார்.

(இ - ள்.) மாறுபாட்டைத் தம்மிடத்தே மிகுதியுமுடைய காக்கையினது முள்ளாற் செய்த கூட்டின் கண்ணிருந்த குயிலின் இளங்குஞ்சுகள், தகுதியாகிய இரண்டு இறகுகளும் முளைத்த அளவில் குடம்பையாகிய சிறையினீங்கி, நெடுந்தூரத்தே செல்லுதலைப்போலத் தூலசூக்குமமாகப் பொருந்திய உடலாகிய சிறையினின்று நீங்கி என்றும் ஒரு படித்தாகிய வீட்டினை அணுகுதற்கு ஏதுவாகிய ஆராய்ச்சிகளைப் பலர் பக்கலில் பலமுறையும் விரும்பிக்கேட்டலால் கெடுகின்ற பிறப்பினுள் வைத்தும் இப்பிறப்பு நும்முடையனவேயாம். நுங்களைப் புதல்வர்களாகப் பெற்றோர்களே புதல்வர்களைப் பெற்றோராவார்கள்.

(வி - ம்.) பின்னுள்ள சிறை, கூடு. பறழ் - குஞ்சு. "பார்ப்பும் பறழும் பறப்பவற் றிளமை" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலறிக. சூழ்ச்சி - உபாயம். உகுபிறப்பு - கெடுகின்ற பிறப்பு. பிறப்பின் - ஏழாவதனுருபு. கூட்டிப்பிரித்தற்கண் வந்தது. "குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே - உடம்போ டுயிரிடை நட்பு" என்ற அருமைத் திருக்குறளின் கருத்தும், "சேக்கை தனித்தொழியச் சேணீங்கு புட்போல, யாக்கை தமர்க்கொழிய நீத்து" என்னும் நாலடிச் செய்யுளின் கருத்தும் இச்செய்யுளிலமைந்து மிளிர்தலைக் காண்க.

(20)

 வினைத்தி ருக்கினை மிளிர்த்த செவ்விமடை வுற்றலால் வினைகண் முற்றுதல்
 அனைத்து நீத்தருள்கொ ழிக்குநற்குரவ னண்மி வாழ்தணிகை மான்மியம்
 நினைத்த லுஞ்சிறிது முற்று றாவென நிகழ்த்தி மேலது விளம்புவான்
 முனைத்த வேற்கரனை முன்னி யன்னது மொழிந்து வந்தவழி தேற்றுமால்.

(இ - ள்.) வினையின் மாறுபாட்டைக் கெடுத்து, இருவினை யொப்பும், மலபரிபாகமும் பொருந்தும் காலம் உற்றாலல்லாமல், மேல்வந்தடையும் எல்லாவினைகளையும் கெடுத்து அருளைக்கொழிக்கும் நல்ல குரவனாகிய முருகப்பெருமான் அண்மி வாழ்கின்ற தணிகையின் பெருமையினை (வாயினாற் சொல்லுதலன்றி,) மனத்தான் நினைத்தலும் முற்றுப்பெறாதெனத் திருவாய்மலர்ந்தருளி, மேலும் அதனைச் சொல்லும் பொருட்டுக் கூர்மைபொருந்திய வேலைத் திருக்கரத்திலுடைய முருகப்பெருமானை நினைத்து அத்தணிகையின் பெருமையை மொழிந்து நூல் வந்த வழியைத் தேற்றுவான்.

(வி - ம்.) மிளிர்ந்த - கெடுத்த. உற்று அலால் - உற்றாலல்லாமல், நீத்துக்கொழிக்கும் குரவன் என்க. பின்வினை - ஆகாமியத்தின்மேற்று. முற்றுதல் - அடைதல். நினைத்தலும் முற்றுறா என்றதனால் சொல்லுதலும் இயலாதென்பது, தானே போதரும் என்க. அது மொழிந்து வந்தவழி - அதனை ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லிவந்த வழியை. தேற்றும் - தெளிவிப்பான். ஆல் - அசை. முற்றுறா என்பதின் இறுதி தொக்கது. இனி முற்றுறாதெனவும் பாடமுண்டு.

(21)

நைமிசப்படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்

348