| பொற்ற வம்புய மலர்ந்தனத் தொழுதியிற் பொலிந்துகற் சுனையாவும் | | அற்ற மெய்யினர்க் கற்றவன் றிருவரு ளாமெனக் குளிர்தூங்கும். |
(இ - ள்.) கூட்டமாகிய சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனால் வருத்தப்பெற்ற இருட்டுண்டங்கள் (தம்மை வருத்திய) சூரியனது (இம் மலர்கள்) இல்லமாமென்று பொருந்தி (அவைகளை) வருத்துவதென்று சொல்லும்வண்ணம் (தேனையுண்டு) களிக்கின்ற வண்டின் கூட்டங்கள் மிதித்துழக்கி (மீண்டும்) தேனையுண்ணும் பொன்மயமாகிய தாமரைகள் மலரப்பெற்று அன்னக் கூட்டங்களாற் பொலிவுபெற்று அம் மலையின்கண்ணுள்ள சுனைகளெல்லாம் (தன்னை வழிபட்டு) அகப்பற்று புறப்பற்றாகிய இருவகைப் பற்றினையும் நீக்கிய உண்மையறிவையுடையார்க்கு (இயல்பாகவே எல்லாப்பற்றையும்) விட்டவனாகிய சிவபெருமான் திருவருளடைந்து குளிர்வித்தல் போலக் குளிர்ச்சிதாங்கும். (வி - ம்.) உழக்குபு - கலக்கி. யாவும் - எல்லாம். அற்ற - இருவகைப் பற்றுமற்ற. அற்றவன் - இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவன். அற்றமெய்யினர்க் கற்றவன் என்பதற்குப் பற்றற்ற உண்மையுடையோர்க்கு முடிவு பட்டவனெனப் பொருள் கூறுவாருமுளர். தூங்கும் - தங்கும். (12) | கொடைமை நல்குவ கற்பகப் பொழிற்கவட் குளிர்மரப் பொதும்பெல்லாம் | | மிடைவி லங்கினந் தேனுவுக் கினமணி மிளிர்சிந்தா மணிக்கந்தேன் | | மடையு டைந்தேழு மலர்க்குலந் தவழ்வன மலர்வளை நிதிக்கென்ப | | உடைதி ரைப்புனற் றீர்த்தங்க டிருத்தங்கட் குதவுவ மலந்தீர்த்தல். |
(இ - ள்.) அக் கைலாயத்தின்கண்ணுள்ள குளிர்ச்சி பொருந்திய மரங்களையுடைய சோலைக ளெல்லாம் கற்பகச் சோலைக்குக் (பிறர்க்குக் கைம்மாறு கருதாது) கொடுக்குந் தன்மையைப் பழக்கம்செய்து கொடுப்பனவாம். (ஆண்டு) நெருங்கிய பசுக்கூட்டங்கள் (தேவலோகத்தின்கண்ணுள்ள) காமதேனுவுக்கும், ஆண்டுள்ள மணியினம் சிந்தாமணியினுக்கும், தேனானது மடையினையுடைத்தெழுவதற் கேதுவாகிய மலர்களும், தவழ்கின்ற சங்கினங்களும், பதுமநிதிக்கும், சங்கநிதிக்கும் கொடுக்கும் தன்மையைக் கற்பிப்பனவாகும் என்று சொல்வார்கள். கரையை மோதுகின்ற அலையோடுகூடிய தீர்த்தங்கள் (மூழ்கிய ஆன்மாக்களின்) ஆணவமலத்தைப் போக்கும் தன்மையை உலகிலுள்ள ஏனைய தீர்த்தங்கட்குக் கற்பிப்பனவாகும். (வி - ம்.) மலர்நிதி, வளைநிதி யெனக் கூட்டுக. திருத்தம் - தீர்த்தம். (13) | வளங்க ளெண்ணில துவன்றிய வத்தகு மாதர்வெண் கயிலாயத் | | திளங்க திர்ச்செழும் பரிதிகள் பற்பல வெறுழ்கொளத் திரண்டாங்கு | | விளங்கொ ளிச்சுடர்த் தூணங்க ளாயிரம் விறந்துபன் மணிமாலை | | துளங்கு மின்னென நான்றசைந் திருங்கவின் றுளும்புமண் டபநாப்பண். |
(இ - ள்.) மேற்கூறிப் போந்த வளப்பங்கள் அளவில்லனவாகி நெருங்கிய அத்தகுதி பொருந்திய கண்டார்க்குக் காதலைத் தரத்தக்க |