பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்175

 போத விழ்ந்துதே னுறைக்குமென் மலர்த்தொடை பொங்கிய விரைச்சாந்தம்
 மாதர் வில்லுகு மிழைகளுஞ் சிந்திமெய் வளந்தப வுளமெல்லாம்
 கோத னுங்கிமெய் யருள்வள மிகவிணோர் குழுக்களைத் த்வவோச்சித்
 தீத னுங்கிய நந்தியங் குருபரன் றிருமுன்பு பணிசெய்ய.

(இ - ள்.) பேரரும்பு விரிந்து தேனைத்துளிக்கும் மெல்லிய மலர் மாலையும், மிகுந்த வாசனையுடன் கூடிய சந்தனமும், அழகிய ஒளியை வெளியிடுகின்ற குண்டலங்களையும் சிந்தி யுடனலங்கெட உள்ளிட மெல்லாம் குற்றம் நீங்கி உண்மையாகிய அருளோடு கூடிய ஞானவளம் மிகாநிற்கத் தேவர் கூட்டங்களை மிக நீக்கிக் குற்றம் நீங்கிய அழகிய நந்தி யெம்பெருமானாகிய குருராயர் சந்நிதியின் கண்ணே திருத்தொண்டு செய்யாநிற்க.

(வி - ம்.) உறைக்கும் - துளிக்கும். மாதர் - அழகு. அனுங்கி - கெட்டு. தவ - மிக. ஓச்சி - ஓட்டி. திருமுன்பு - சந்நிதி.

(22)

 பரந்து நின்றொளிர் பராபரை யாதியாப் பன்னுமைம் பெயர்பூண்டு
 நிரந்த வைந்தொழி றன்னொடும் பிரிவின்றி நிகழ்த்துசத் தியையன்றி
 உரந்த ழைத்திடா வுண்மையி னுடன்றொழு துயிரெலாங் களிதூங்க
 வரந்த ழைத்தவ னுமையொடும் பேரருள் வழங்கிவீற் றிருந்தானால்.

(இ - ள்.) பரவி நின்று ஒளிர்கின்ற பராபரை முதலாகச் சொல்லப்படுமைம் பெயர்களைப் பெற்று (உலகத்துக்) கலந்த ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள லென்னு மைந்தொழிலினையும் சிவமாகிய தன்னோடும் நீக்கமின்றி இயற்றுகின்ற சத்தியை யல்லாமல் (ஆன்மாக்கட்கு) அறிவுதியாத உண்மையினால் (அம்மையப்பரை) ஒரு சேர வணங்கி ஆன்மாக்களெல்லாம் மகிழ்ச்சியிலே தங்கும் வண்ணம் மேன்மை பொருந்திய இறைவன் உமையம்மையாரோடு பெரிய அருளை வழங்கி வேறொருவர்க்கில்லாத சிறப்புட
னெழுந்தருளியிருந்தனன்.

(வி - ம்.) தன் என்றது இறைவனை. நிகழ்த்தல் - செய்தல். உரம் - அறிவு. "உரனென்னும் தோட்டியான்" என்னுமிடத்து இப்பொருட்டாதலை யறிக. தழைத்தல் - தோன்றல். உண்மையின் - இன் என்பது ஐந்தாவது ஏதுப்பொருள். தூங்கல் - தங்கல். வரம் - மேன்மை.

(23)

 வண்டு ழாய்த்தொடை மார்பனும் பிரமனும் வானவர் முதற்கோவும்
 மிண்டு மொன்பதிற் றிருவரும் பதினொரு மூவரும் வேறாய
 தொண்டர் யாவருந் தொழுதுதங் குறைவினாய்த் துறுத்தமே வரப்பெற்றுக்
 கொண்ட வோகையி னவரவ ருறைபதி குறுகின ரதுகாலை.

(இ - ள்.) வளப்பம் பொருந்திய திருத்துழாய் மாலையை யணிந்த மார்பையுடைய விண்டுவும், பிரமனும் தேவர்கட்கு முதல்வனாகிய இந்திரனும் நெருங்கிய பதினெண் கணத்தவரும், இருவர், எண்மர், பதினொருவர், பன்னிருவராகிய முப்பத்து மூவரும் இவர்களின் வேறாகிய மெய்யடியார்கள் யாவரும் தொழுது தங்கடங்கள் குறைகளை விண்ணப்பித்து