பக்கம் எண் :

176தணிகைப் புராணம்

அடையத் தகுந்தவற்றை அடையப்பெற்றுத் தம்மிடத்துண்டாகிய உவகையினாலே அவரவர்கள் வசிக்கின்ற இடங்களை யடைந்தார்கள் அக்காலத்து.

(வி - ம்.) வினாய் - சொல்லி. துறுத்த - அடைந்தனவாகிய பொருள்கள். மேவரப்பெற்று - அடையப்பெற்று. அது காலை - அக்காலத்தில்.

(24)

 பக்கு வம்பல புண்ணிய மலபரி பாகஞ்சத் திநிபாதம்
 தொக்க வல்வினை யொப்புநே ரடுத்தலிற் றொல்லுரி கழல்பாக்கு
 மிக்கு நாடும்வா ளரவெனப் பிறவியை வெருவிய வுளத்தோடும்
 தக்க மாதவ ரெழுவரு மறுவலுந் தாழ்ந்தெழுந் தெதிர்நின்றார்.

(இ - ள்.) வீடுபேறடைதற் கதிகாரமும், சிவபுண்ணியமும், மல முதிர்தலும், அருள் பதிதலும், இருவினை யொப்பும் காரணகாரிய முறைப்படி பொருந்துதலினாலே பழைய தோல் நீங்கும் பொருட்டு மிக்கு ஆராயும் ஒளி பொருந்திய அரவினைப்போலப் பிறப்பினுக்கஞ்சிய வுள்ளத்தோடு தகுதியையுடைய பெரிய தவத்தையுடைய முனிவர்கள் எழுவரும் பின்னரும் வணங்கி யெழுந்தெதிரே
நின்றார்கள்.

(வி - ம்.) பக்குவம் - அதிகாரம். பல புண்ணியம் - ஈண்டுச் சிவ புண்ணியம். மலபரி பாகம் - மலமுதிர்தல். சத்திநிபாதம் - அருள் பதிதல். வினையொப்பு - இருவினை யொப்பு. நேரடுத்தல் - ஒன்றன் பின் ஒன்றாகவருதல். மாதவரெழுவர் - சனற்குமாரரிடத்திற் சித்தாந் தப்பொருள் கேட்டவர். இவர் சத்தியசேனன் முதலிய எழுவர்கள். இப்படலம் (83,84) ஆகிய செய்யுள்களா னறிக.

(25)

 குடந்தம் பட்டெதிர் நிற்றலும் பசுங்கதிர்க் குரூஉமதி மிளிர்வேணி
 மடந்தை பாகன்மற் றுயிர்க்குயி ராகிய வள்ளலன் னவர்நெஞ்சம்
 கிடந்த வேட்கையைத் திருவுளத் தடைத்தருள் கெழுமுநந் தியின்பாங்கர்த்
 தொடர்ந்த வன்பினா லுணர்சனற் குமரனாந் தொன்முனி முகநோக்கி.

(இ - ள்.) நால்விரன் முடக்கிப் பெருவிரலினுதி நெஞ்சிடை வைத்து எதிரே நிற்றலும் பசிய கிரணங்களோடு நிறம் விளங்குகின்ற பிறைச்சந்திரன் விளங்குகின்ற சடையையுடையவனும் அம்மையாரைப் பாகத்திலுடையவனும், உயிர்க்குயிராகிய வள்ளற்றன்மையுடையவனுமாகிய சிவபெருமான் அம்முனிவர்களுள்ளத்துத் தங்கிக்கிடந்த அவாவைத் திருவுள்ளத்திற்கொண்டு அருளோடு கூடிய நந்தி யெம்பெருமான் பக்கலிற் றொடர்ச்சியுற்ற அன்பினாற் சித்தாந்த நுண்பொருணலங்களை (முறையாக) உணர்ந்த சனற்குமாரனாகிய பழைய முனிவரது முகத்தை நோக்கி.

(வி - ம்.) குடந்தம் - நால்விரன் முடக்கிப் பெருவிரனிறுத்தி நெஞ்சிடை வைத்தல்; இனி யொருசாரார். மெய்கோட்டிக் கைகுவித்து நிற்றலென்பார். வேறொரு சாரார் வணக்கமென்பார். திருவுளத் தடைத்தல் - திருவுளங் கொளல்; குழூஉக்குறி. கெழுமு - பொருந்திய.

 செயிர்பி றங்கிய பகைமையு முறவெனச் செறிந்தநம் மையும்பாரா
 உயிர்பி றந்தவ ராதலின் முனிவரர்க் குண்மையை முறையானே.