| சுற்றமென் வல்லி பின்னித் தொக்கசத் தாதி வெண்டேர் | | செற்றியிந் தியமா மல்கிச் செனனமே மரண மென்ன | | முற்றிய வழிக ணீண்டு முனிவினைத் தழல்கள் சூழ்ந்து | | பற்றிய வாழ்க்கைக் காடு பாற்றுமெஃகின்று பெற்றாம். |
(இ - ள்.) உறவினரென்கின்ற மென்மையாகிய கொடியாற்றுவக்குண்டு கூடிய சத்த முதலிய புலன்களாகிய கானனீர் நெருங்கி ஞானேந்திரிய கன்மேந்திரியங்களாகிய மிருகங்கள் நிறைவுற்றுப் பிறப்பிறப்பென்று சொல்லும் மார்க்கங்கள் நீளப்பெற்று (யாவரையும்) வருத்துகின்ற வினைகளாகிய நெருப்பாற் சூழப்பெற்றுப் பொருந்திய இல்லற வாழ்வென்னும் காட்டைக் கெடுக்கும் ஆயுதத்தை இன்று அடியேங்கள் அடைந்தனம். (வி - ம்.) வல்லி - கொடி. வெண்டேர் - கானற்சலம். சத்தாதி வெண்டேர் - ஓசை, ஊறு, ஒளி, நாற்றம், சுவை யாகிய கானனீர் இவை புலன்கள். செற்றி - நெருங்கி. வினைத்தழல் - நல்வினை தீவினையாகிய நெருப்பு; நல்வினையும் வீடடைதற்குத் தடையா மாதலின் "வினைத்தழல்" என்றார். இச்செய்யுள் உருவகவணி. (30) | சுத்தமெய்ஞ் ஞான வின்பத் துறைபடி முத்திக் கேது | | சத்தியந் தருமந் தானந் தவமக மக்கட் பேறென் | | றித்திற மென்றுந் தத்த மியல்புளி யொழுக லென்றும் | | வைத்தசொன் மறையிற் றோன்று மலைவுமின் றொழித லானேம். |
(இ - ள்.) தூய்மையாகிய மெய்ஞ்ஞான வின்பத்துறையின் கண்ணே மூழ்குகின்ற வீட்டிற்கு வாயில்கள், சத்தியமும், அறமும், தானமும், தவமும், வேள்வியும் மக்கட்பேறும் என்று சொல்கின்ற இவைகளென்றும், தங்கடங்கள் வருணாச்சிரமத்திற்குத் தக்க முறைப்படி நடத்தலென்றும் (இறைவனாற்றிருவாய் மலர்ந்தருளி) வைத்த ஒலி வடிவமாகிய வேதத்திற் காணப் பெறும் மயக்கமும் இன்றொழியப் பெற்றோம். (வி - ம்.) படிமுத்தி: வினைத்தொகை. தத்தமியல்புளி யொழுகல் -தங்கள் தங்கள் வருணாச்சிரம தருமத்திற்குத்தக ஒழுகல். மலைவு - மயக்கம். (31) | என்றுளத் தெழுந்த வார்வ மெழுகட லென்னப் பொங்க | | நின்றுவிண் ணப்பஞ் செய்யு நீத்தமா தவத்தி னார்க்கு | | நன்றருட் பார்வை நல்கி நவைதபு தீக்கை யாற்றி | | ஒன்றுமுப் பொருளு மும்மை யுணர்வினாற் றெளித்திட் டானே. |
(இ - ள்.) என்று கூறி உள்ளத்தின்கண் ணெழுந்த அன்பு எழுகடலென்று சொல்லும் வண்ணம் பெருக நின்று விண்ணப்பஞ் செய்கின்ற எல்லாப் பற்றையும் விட்ட தவத்தையுடைய ஏழு முனிவரர்க்கும் பெரிதும் அருணோக்கம் செய்து குற்றம் நீங்குதற் கேதுவாகிய நிருவாண தீட்சை செய்து ஒன்றினொன்று அத்துவிதமாகக் கலந்துள்ள பதி |