| (இ - ள்.) தலைவனே வணக்கம். எங்களை யடிமைகொண்ட மலமற்றவனே வணக்கம். கெடாத தன்னியல்புடையவனே வணக்கம். நின்னை அடைந்திருந்தும் அடையாதவர்கள்போல உலகியலின்மாட்டெங்கள் மனஞ்செல்வதாயிற்று. எங்கடந்தையே உய்யும்வண்ணம் நினது கருணையை யெங்கண்மாட்டுச் சேர்த்தருளெனச் சனற்குமரா முனிவன் சொல்வான். (35) | | பொறுமையைம் பொறிய டக்கல் புரைதபு தவமா சார | | | முறைவழி யொழுகல் சீல முற்றிய வாய்மை யூக்கம் | | | அறிவரு ளருச்ச னாதி யடைந்தன்பு கடைப்பி டித்தல் | | | நெறியிவர் புத்தி கூர்த்த னடுநிலை நிலைத்தி ரேனும். |
(இ - ள்.) (தம்மை யிகழ்வாரைப் பொறுக்கும்) பொறையும், (புலன்களிற் செல்கின்ற) ஐம்பொறியினை (தத்த நெறியிற் செல்லாது) அடக்கலும், (தனக்கு வரும் நோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க் கூறு செய்யாமையும் முதலிய) குற்றம் நீங்கிய தவமும், (நீர்பலகான் மூழ்கல் முதலிய) ஆசாரமும், நூன்முறை வழி நடத்தலும், நல்லொழுக்கமும், உண்மையும் உள்ளக் கிளர்ச்சியும், சிவஞானத்தைத் தருகின்ற சிவார்ச்சனை முதலிய தொழில்களை யடைதலும், அன்பே சிவமென உறுதியாகக் கோடலும், நன்னெறியிற் செல்கின்ற அறிவு மிகுதலும், நடுநிலையினிற்ற லுமாகிய செயல்களில் நிலைபெற்றுள்ளீரேனும். (36) | | வாதனை மலநோய் தாக்க வாய்மையி னிலைத்த லின்றி | | | வேதனை யுலகி னுள்ளம் விரவமெய் விதிர்ப்புக் கொண்டீர் | | | சாதகப் பாலிர் நீயி ராதலிற் சாத கத்தாற் | | | சாதலும் பிறப்பு மில்லாச் சாத்தியப் பாலி ராமின். |
(இ - ள்.) வாசனாமலமாகிய நோயானது தாக்கலான் (தன்னியல்பாகிய) உண்மையில் (மனம்) நிலைபெறுதலின்றித் துன்பமே வடிவமாகிய உலகியலிடத்து மனங்கலக்க உடனடுக்கம் கொண்டீர்கள். சாதனங்களால் சாத்தியத்தினையடைய முயற்சியுடையீராதலின் (பசு கரணங்களெல்லாம் பதிகரணங்களாக) நிட்டை கூடலாகிய ஏதுவால் பிறத்தலு மிறத்தலுமிலவாகிய சாத்தியமாஞ் சிவத்தின் பகுதியராமின்கள். (வி - ம்.) வாய்மை, சிவம்; ஏனைய பொய்யாகலின் . வேதனை - துன்பம். சாதகத்தால் - பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாதல் நிட்டை கூடலா லாகலின் நிட்டை கூடலைச் "சாதக" மென்றார். (37) | | சாதக வழியும் பல்ல வவற்றினுட் டளர்வின் றாவ | | | ஏதமி றலந்தோ றெய்தி யிறைஞ்சுத லொன்றின் வைகல் | | | தீதறு தலமும் புத்தி செறிப்பவீ டுறுப்ப வேண்டின் | | | ஓதிய விரண்டு முய்ப்ப வுலப்பில வுலகின் மாதோ. |
(இ - ள்.) (சாத்தியத்தினை அடைதற்குக் கருவியாகிய) சாதகவழிகளும் பலவாகும். அச்சாதனங்களுள் சோர்விலவாகிய சாதனங்கள் (யாவையெனின்) குற்றமிலவாகிய தலங்கடோறும் பொருந்தி |