பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்181

வணங்கல், ஒரு தலத்திற் றங்குதலாம். குற்றமற்ற தலங்களிற் போகத்தை மிகச் சேர்ப்பனவும், வீட்டின்கட் சேர்ப்பனவும், விரும்பின் முற்கூறிய வீடிரண்டினையுந் தருவனவாகியும் உலகத்தில் அளவிலாதன உளவாம்.

(வி - ம்.) ஆவ, ஆம்என ஒருசொல் வருவித்து முடிக்க. புத்தி - போகம். செறிப்ப, உறுப்ப, உய்ப்ப இவை அன்பெறாத பலவின் படர்க்கை. இரண்டு - புத்தி முத்தி.

(38)

 அவற்றினுட் புத்தி முத்தி யருங்குரைத் தின்றி யார்க்கும்
 தவற்றினைத் துமித்து நல்குந் தலங்களுஞ் சில்ல வாகும்
 அவற்றுளு முக்கண் மூர்த்தி யமர்தலஞ் சில்ல சில்ல
 துவற்றுதேங் கடப்பந் தாரான் சூழலப் பெயருங் கேண்மின்.

(இ - ள்.) அத் தலங்களுள் யாவர்க்கும் (மலமாகிய) குற்றத்தி னைக்கெடுத்துப் போகத்தினையும் வீட்டினையும் (பெறுதற்கு) அருமை யுடையதின்றிக் கொடுக்கின்ற தலங்கள் சிலவாகும். அத் தலங்களினுள்ளும் மூன்று கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கிற தலங்கள் சிலவாகும். தேனைத் துளிக்கின்ற கடப்பமாலையை யணிந்த முருகக் கடவுள் எழுந்தருளியிருக்கின்ற இடங்கள் சிலவாகும். அப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெயரையும் கேண்மின்கள்.

(வி - ம்.) அருங்குரைத்து - அருமைத்து, குரை அசைநிலை. துமித்து - கெடுத்து. சில்ல கடப்பந்தாரான் சூழலெனக் கூட்டுக.

(39)

வேறு

 மாலைவெள் ளருவி தாழ்வரைக் கயிலை மதமலை யுரற்றுமத் தரமே
 சாலநோ யனுக்குஞ் சம்புலா சியமே தண்பனிக் குவடுசூ ழிமயம்
 ஏலமார் சோலைத் தருமநற் கான மெழில்குலா வியகுணத் தானம்
 கோலம்வீற் றிருந்த வளமிகு நீல கண்டமே குலாசல வரைப்பு.

(இ - ள்.) மாலையினைப் போன்று வெள்ளிய அருவிநீ ரிழிகின்ற கைலாயமும், மதத்தை யொழுக்குகின்ற மலைபோன்ற யானைகள் ஒலிக்கின்ற மந்தரமும், நோயினைமிகக் கெடுக்கின்ற சம்புலாசியமும், குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டிகள் நிறைந்த சிகரங்களோடுகூடிய இமயமலையும், ஏலச்செடிகள் பொருந்திய சோலைகளோடுகூடிய நல்ல தருமகானமும், அழகுபொருந்திய குணத்தானமும், அழகு தங்கியிருக்கின்ற வளமிகுந்த நீலகண்டமும், குலாசல மென்னுமிடமும்.

(40)

 வெறிகமழ் பொழில்சூழ் வில்வகங் கணமே வினைக்குறும் பகழ்தரு வராகம்
 எறிதிரைக் கங்கை வட்டமேத் துநர்த மிடர்தபுத் தருள்சிலை வட்டம்
 மறுவில்கந் தருவ வனந்தெழித் தளிசேர் மலர்ச்சுனை வெறுத்தகே தாரம்
 உறைமதுப் படப்பைக் காமிகா ரணிய முதீசியுத் தாலக வைப்பு.

(இ - ள்.) வாசனை வீசுகின்ற சோலைகள் சூழ்ந்த வில்வகங்கணமும், தீவினையாகிய குறும்பினை வேரோடும் கல்லியெடுத்தற் கேதுவாகிய வராகமும், அலையை வீசுகின்ற கங்காவட்டமும், துதிக்கின்றவர்களுடைய