| உடற்பய னளிக்கு மிருடிவிந் தியமே யும்பரார் தொழும்வராஞ் சலமே | | தடப்பல நதிசூழ் காஞ்சிமா நகரந் தண்டலை யுடைவடா ரணியம் | | மடப்படு மலந்தீர்த் தருடிருப் பாசூர் வயங்கிய வியாக்கிரே சுரமே | | கடப்பருஞ் சீர்த்தி விரிஞ்சைமா நகரங் கரிசிரித் திடுந்திரு வல்லம். |
(இ - ள்.) உடலெடுத்ததன் பயனை யளிக்கின்ற இருடிவிந்திய மென்னும் தலமும், தேவர்கள் வணங்கும் வராஞ்சல மென்னும் வைப்பும், பொருந்திய பலநதிகள் சூழப்பெற்ற காஞ்சிநகரமும், சோலைகளையுடைய திருவாலங்கா டென்னும் தலமும், அறியாமையோடுகூடிய மலத்தினைப் போக்கித் திருவருளைப் பாலிக்கின்ற திருப்பாசூரும், விளங்குகின்ற திருப்பாதிரிப்புலியூ ரென்னும் வைப்பும், நீக்குதற்கரிய சிறப்புடனேகூடிய திருவிரிஞ்சைநகரமும், குற்றங்களை யெல்லாம் போக்கும் திருவல்லமென்னும் தலமுமாகிய. (வி - ம்.) பலநதிகள் "கம்பை பம்பை மஞ்சினிபிச்சி - கலிச்சி பொன்னி மண்ணி வெஃகாவே" என்னும் பலநதிகள். மடப்படு: விகாரம். பாசூர் - மூங்கில்வனம். பாசு - மூங்கில். இத்தலப் பெயர்கள் "எட்டனை நாற்றியமுட்டிய இவை" என அடுத்த செய்யுளில் வரும் இவை யென்னும் சுட்டுப்பெயர் கொண்டது. (47) | எட்டனை நாற்றி யிரட்டிய விவைமற் றெறிதிரைப் பெரும்புனற் கங்கை | | வட்டவார் சடிலத் திளம்பிறை கதிர்க்கும் வள்ளலா ரமர்தல மாகும் | | அட்டொளி விரிய வழற்பொறி தும்மு மரித்தலை வேல்வல னுயர்த்த | | கட்டழ கெறிக்கு மறுமுகக் கடவுள் கதியநற் றலங்களுந் தெரிப்பாம். |
(இ - ள்.) எட்டினை நிலைமொழியாக நிறுவி (அவ்வெட்டனையே) இரட்டித்துக் கூடியதனாற் போந்த இவ் வறுபத்துநான்கு தலங்களும், எறிகின்ற அலைகளோடுகூடிய மிக்க நீரையுடைய கங்கை நதியுடனே வட்டமாகக் கட்டிய பிறைச்சந்திரன் ஒளியைச்செய்யும் வள்ளலாகிய சிவபிரானெழுந்தருளிய திப்பிய தலங்களாகும். செறிந்த ஒளிவிரியுமக்கினிப் பொறிகளை வெளியிடுகின்ற கூர்மைபொருந்திய தலையினையுடைய வேற்படையை வலப்பக்கத்தினுயர்த்த மிக்க அழகினை வெளியிடுகின்ற அறுமுகப்பெருமான் விரும்பிய நல்ல தலங்களையும் தெரிவிப்பாம். (வி - ம்.) எட்டனை நாற்றி யிரட்டுதல் - எட்டே எட்டே - அறுபத்துநான்கு தலம். அட்டு - செறிந்த. தும்மு - கக்குகின்ற. அரி - கூர்மை. கட்டழகு - மிக்கவழகு. (48) | பிறங்கிய பவானி சங்கமஞ் சமணப் பிராணநா சனம்புயன் மேகம் | | உறங்கெயி லுடுத்த பவானிசங் கரம்விண் ணுவகையிற் பணிசர வணமே | | அறங்கிளர் குமார புரமணங் கஞற்றி யலர்விரி கதம்பகா ரணியம் | | மறங்கடி வன்னித் தானநீ ரோடை மலிந்துவாங் கியசத்தி புரமே. |
(இ - ள்.) விளங்கிய பவானி சங்கமமென்னும், தலமும், சமணப் பிராண நாசனமும் நீரோடுகூடிய மேகங்கள் தங்குகின்ற மதில்களாற் |