சூழப்பெற்ற பவானிசங்கரமென்னும் தலமும், தேவலோகத்திலுள்ளவர் மகிழ்வுடன் வந்து வணங்குகின்ற சரவணமென்னும் தானமும், தருமம் விளங்கின்ற குமாரபுரமும், வாசனையை வெளியிட்டு மலர்கள் விரியப்பெற்ற கடம்பமாவனமும், பாபத்தை நீக்குகின்ற வன்னித்தான மென்னும் தலமும், நீரோடைகள் நிறைந்து சுற்றிய சத்திபுரமும். (வி - ம்.) புயல் - நீர். விண் - ஆகுபெயர். மறம் - பாவம். வாங்கிய - வளைந்த. (49) | வரம்பல வுதவுஞ் சண்முக புரஞ்சீர் மல்கிய கன்னபூ டணமேர் | | பரந்தெழு கீர்த்தி பூடணம் வாகு லேயமா புரம்பவுத் திரமே | | விரவுமா ரூட மேடக மோசை விரியுநப் பிரமத மோசம் | | புரவுபூண் டருளுங் கந்தமா தனமே போகுயர் முடிக்கிர வுஞ்சம். |
(இ - ள்.) (அடியார்கள் விரும்பிய) பல வரங்களையு முதவுஞ் சண்முகபுரமும் சிறப்பு மலிந்த கன்னபூடணமென்னும் தலமும், அழகு பரந்தெழுகின்ற கீர்த்தி பூடணமென்னும் தலமும், வாகுலேய மாபுரமென்னும் தலமும், தூய்மையே பொருந்துகின்ற ஆரூடமென்னும் தலமும், திருவேடகமென்னும் தலமும், பலவித ஒலிகளு மலியப்பெற்ற நல்ல பிரமதமோசமெனுந் தலமும் காத்தலை மேற்கொண்டி யாவர்க்கு மருளினைச் செய்தற்கேதுவாகிய கந்தமாதன மென்னும் வைப்பும், மிகவுமுயர்ந்த சிகரங்களோடு கூடிய கிரவுஞ்சமென்னும் வைப்பும். (வி - ம்.) போகு - உயர்ந்த. (50) | தவமலி வேத சயிலமின் புறுத்துஞ் சத்திய வாசகம் பிறவி | | அவமறு குமர கோட்டமே "லகு மாதரித் துறுங்கவு மாரம் | | துவர்வளம் படைத்த தாமிர சூடத் துவசமே வில்வகா னனமே | | திவளொளி மயூர மதம்விடுந் தானத் தேவகும் பக்குகைத் தானம். |
(இ - ள்.) தவங்கள் முற்றுதற்கேதுவாகிய வேதசயிலமென்னும் தானமும், (தன்னை யடைந்தவர்களுக்கு) இன்பினைச் சேர்த்தற் கேதுவாகிய சத்தியவாசக மென்னும் தலமும், பிறவியினால் வருகின்ற குற்றங்களை நீக்குதற்கேதுவாகிய குமரகோட்டமும், எழுவகை யுலகின் கண்ணுள்ளவர்களும் விரும்பிப் பொருந்துகின்ற கௌமாரமென்னும் தலமும், பவளத்தின் வளப்பத்தினை யுடைத்தாகிய தாமிரசூடத் துவசமென்னும் தலமும், வில்வாரணியமும், மிக்க ஒளியோடு கூடிய மயில்கள் மதம் நீங்குதற்கேதுவாகிய விடத்தோடு கூடிய தேவகும்பக்குகைத் தானமென்னும் வைப்பும். (வி - ம்.) மயூரம் - மயில். (51) | எழில்வளர் விசாக பவனமெய்ஞ் ஞான மீத்தருள் வித்தியா வனநல் | | விழவுகொண் மார னந்தகா ரணமெய் விளைத்திடுஞ் சுவேதமா வனமேர் | | தழைசுகு மார சிகாசலம் வளங்க டகுஞ்சுரா பயப்பிர தந்தேன் | | வழிமுழை குவட்டு வள்ளிவெற் போங்கு மாவிர புரமெனுந் தலமே. |
|