(இ - ள்.) அழகு விளங்குகின்ற விசாக பவனமென்னும் தலமும், உண்மைஞானத்தைத் தருகின்ற வித்தியாரணியமும், நல்ல சிறப்பினைக் கொண்ட மாரனந்த காரணமும், உண்மையுளவாதற் கேதுவாகிய திருவெண்காடும், அழகு தழைக்கின்ற சுகுமார சிகாசலமென்னும் தலமும், பலவளங்களும் பொருந்திய சுராபயப்பிரத மென்னும் தலமும், தேனிழியும் குகையினையுடைய சிகரத்தோடு கூடிய வள்ளிமலையும், உயர்ந்த மாவிரபுரமென்னும் தலமும். (வி - ம்.) பவனம் - கோவில். விழவு - சிறப்பு. (52) | வளமிகு சோமாக் கந்தமும் மலந்தீர் வாகுலே யாசிர மந்தொல் | | பளகறு கெந்த சயிலநீன் முகின்மீப் படிதருஞ் சித்திர கூடம் | | தளிரிணர்ச் சோலைச் சம்பகே சுரங்கோ முக்கியந் தறுகண்மா வேழம் | | களகள முழங்குங் காளத்தி விலங்கல் கருணைசெய் பிரணவ புரமே. |
(இ - ள்.) வளப்ப மிகுந்த சோமாக்கந்த மென்னும் தலமும், மும்மலர்களையும் நீக்கும் வாகுலேயாச்சிரம மென்னும் வைப்பும், பழமையாகிய குற்றம் நீக்குதற்கேதுவாகிய கெந்தமாதன மென்னும் தலமும், நீலநிறம் பொருந்திய மேகக்கூட்டங்கள் மேலே படிதருகின்ற சித்திரகூடமென்னும் வைப்பும், தளிரோடுகூடிய பூங்கொத்துக்களையுடைய சோலையைத் தன்னிடத்தே கொண்ட சம்பகேசர மென்னும் தலமும், கோமுகி என்னும் தலமும், அஞ்சாமையோடு கூடிய யானைகள் களகள என்னும் ஒலிக்குறிப்புடன் பிளிறும் திருக்காளத்தி யென்னும் மலையும், தன்னையடைந்தவர்க்குக் கருணையைச் செய்தற் கேதுவாகிய ஓங்கார மென்னும் தலமும். (வி - ம்.) இத்தலம் தணிகையின் பக்கலிலுள்ளது. நீல்முகில் - கடைக்குறை. களகள - ஒலிக்குறிப்பு. பளகு - குற்றம். (53) | உரனிகழ் ஞானா சனங்கதிக் கேணி யுஞற்றுறும் புத்திர காமம் | | அரிறபு மிந்தி ராபயப் பிரத மவிர்சிவோ பாசிய நகரம் | | பிரமநிக் கிரகம் பீடுசேர் பிரம வனுக்கிர கம்பிழை தபுத்தோர் | | இரவுநன் பகலும் வழிபடும் வாத புரமில கியவராஞ் சலமே. |
(இ - ள்.) தன்னையடைந்தவர்க்கு ஞான முளவாதற்குக் காரணமாகிய ஞானாசன மென்னும் தலமும், வீட்டிற் கேதுவாகிய சோபான முறைகளை யுளவாக்குகின்ற புத்திரகாம மென்னும் தலமும், தன்னையடைந்தோர் பிணக்கை நீக்குதற் கேதுவாகிய இந்திரா பயப்பிரத மென்னும் தலமும், விளங்குகின்ற சிவோபாசிய நகரமென்னும் தலமும், பிரமநிக்கிரக மென்னும் தலமும், பெருமை பொருந்திய பிரம அனுக்கிரகமென்னும் தலமும், ஆணவமாகிய குற்றத்தை நீக்கியவர்கள் இரவும் பகலும் வழிபடுகின்ற திருவாதவூரென்னும் தலமும், வராஞ்சலமென்னும் தலமும். (54) | பொலிந்தசீர் வரத சயமபி டேக புரமலர்க் குறுஞ்சுனை படப்பை | | மலிந்தகல் யாண கானம்வீழ் வரங்கள் வழங்கிடுஞ் சுப்பிர மணியம் |
|