பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்187

 ஒலிந்தபூம் பொதும்பர் வித்தியா தரமே யுளங்கவர் மணிகண்டே சுரமே
 சலந்தவிர் சமயத் தானபஞ் சகமென் றுரைத்திடுந் தலங்களோ ரைந்தே.

(இ - ள்.) பொலிவுபெற்ற சிறப்புடனே கூடிய வரதசயமென்னுந் தலமும் அபிடேகபுரமென்னும் தலமும், மலர்களோடு கூடிய குறுஞ்சுனைகளும், தோட்டக் கூறுகளும், நிறைந்த கலியாணகான மென்னும் தலமும், அடியார்கள் விரும்பிய வரங்களை வழங்குதற் கேதுவாகிய சுப்பிரமணியமென்னும் தலமும், தழைத்த பூக்களோடு கூடிய சோலையையுடைய வித்தியாதர மென்னும் தலமும், கண்டோருள்ளத்தைக் கவர்கின்ற மணிகண்டேசுரமென்னும் தலமும், கோபத்தை நீக்குகின்ற சமயத்தான பஞ்சகமென்று சொல்லப்படும் தலங்களோரைந்தும்.

(வி - ம்.) வீழ் - விரும்புகின்ற. ஒலிந்த - தழைத்த; ஒலியைச் செய்கின்ற எனினுமாம். பஞ்சகமென்பது ஐந்து தலம்.

(55)

 தரைபுகழ் சயந்த புரமரு ளெவர்க்குந் தருங்குமா ராசல மணிகள்
 வரைகிடந் திமைக்கும் வேங்கட முத்தி வழங்குசீ பூரண கிரியென்
 றுரைதரு நாலெண் ணிருதல முருகற் குறுதல நுமக்கொத்த தலமும்
 புரையிலித் தலத்து ளுயர்ந்தநான் கீற்றிற் புகன்றநாற் றலமவை யவற்றுள்.

(இ - ள்.) உலகத்திலுள்ளவர் புகழத்தக்க சயந்தபுரமும், அருளினையாவர்க்கும் கொடுத்தற்கேதுவாகிய குமாராசலமென்னும் மலையும், முத்துக்கள் மலையிடங்களிற் கிடந்து ஒளிர்கின்ற திருவேங்கடமலையும் முத்தியைக் கொடுக்கின்ற சீபூரண கிரியுமென்று சொல்லத்தக்க அறுபத்துநான்கு தலங்களும் முருகப்பெருமானுக் கன்புமிக்க தலமாகும். குற்றமிலவாகிய இங்குக் கூறிய தலங்களுள் வைத்துயர்ந்தன இறுதியிற் கூறிய நான்கு தலங்களாகும். அவை (அத்தலங்கள்) நுங்கள் தகுதிக்கொத்த தலமாகும். அவற்றுள் சீபூரணகிரி நூற்றிருபத்தெட்டினு மேலாய் விளங்கும் என அடுத்த பாட்டுடன் கூட்டுக.

(வி - ம்.) சீபூரணகிரி - தணிகைமலை.

(56)

 மதந்தவி ரடியார் வாதனை மலமும்
           வாட்டுசீ பூரண கிரியாம்
 விதந்தநூற் றிருபத் தெட்டினு மேலாய்
           விளங்குமால்வி னைக்குறும் பொதுக்கிப்
 பதந்தர வல்ல சத்திய விரத
           பாற்கர கேத்திர மாகி
 இதந்தரு மிறைவற் கருண்மொழி கொடுத்த
           திதுவலா தின்மையின் மாதோ.

(இ - ள்.) ஆணவமலம் நீங்கிய மெய்யடியார்களின் வாசனாமலத்தினையும் கெடுக்கின்ற சீபூரணகிரி எம்மாற் சிறப்பித்துச் சொல்லப்