பக்கம் எண் :

188தணிகைப் புராணம்

பெற்ற நூற்றிருபத்தெண் டளிகளினும் மேலாகி விளங்கும். வினையின் சேட்டைகளை நீக்கி வீடுபேற்றினைத் தர வன்மையையுடைய சத்தியவிரத சூரியனுக்குரிய தானமாகி (மக்கண் முதலியோர்க்கு) இன்பினைத் தரவல்ல சிவபெருமானுக்குச் செவியறிவுறுத்தது இத்தலமல்லாமல் வேறு தலம் இன்மையான்.

(வி - ம்.) உம்மை உயர்வு சிறப்பு. பாற்கரன் - சூரியன். கேத்திரம் - க்ஷேத்திரம் என்பதன்றிரிவு. இதம் - இன்பம். அருண்மொழி-செவியறிவுறுத்தல் ஆணவம் நீங்கியும் வாசனை நீங்காதாதலின் அவ்வாசனாமலத்தையும் என்றும்மை கொடுத்தோதினர்.

(57)

 என்றுமோ ரியல்பி னின்றிடுஞ் சீபூ
           ரணத்தினை யாயிடை வதிவோர்
 மன்றநன் றுறலா லப்பெயர்த் தாகும்
           வானவர் திருவெலா நிரம்பி
 நின்றிட லானு மப்பெய ரதற்கு
           நிகழ்த்துவர் கணிகமாத் திரையின்
 வென்றிகொள் வரங்கள் வழங்கலிற் கணிக
           வெற்பென மிகுமொழி யுடைத்தால்.

(இ - ள்.) எக்காலத்தினுமொரு தன்மையதாக நிற்கின்ற சீபூரணகிரி ஆண்டுத் தங்குகின்றவர்கட்கு நிச்சயமாக வீட்டினைத் தருதலால் அச்சீபூரணமென்னும் பெயரினையுடையதாகும். தேவர்கள் செல்வமெல்லாம் நிறைத்து நிற்றலான் அச்சீபூரணமென்னும் பெயரினையிட்டம் மலையை வழங்குவார்கள். கணநேரத்தில் மேன்மையைக்கொண்ட வரங்களை (விரும்பியவர்க்கு) வழங்குதலால் கணிக மலையென உயர்த்துச்சொல்லும் மொழியினையுமுடையது.

(வி - ம்.) ஸ்ரீ. திரு. பூரணத்தினை - முத்தியாகிய நிறைவை. நன்று - வீடு. கணிகம் - க்ஷணிகமென்பதன்றிரிவு. வென்றி - மேன்மை.

 மூலமா யுலக முழுவதும் படைத்த
           முதல்வனே முருகனைத் தனக்கு
 மூலமாக் கொண்டு வணங்கலின் மூலாத்
           திரிவைக றொறுமலர் மூன்று
 கோலமார் காவி யுயிர்த்தலி னல்ல
           காத்திரி குமைத்திடுங் கற்ப
 காலமு மழியா திருத்தலிற் கற்ப
           சித்தமர் தணிதலிற் றணிகை.

(இ - ள்.) காரணமா யுலகமுற்றிலு முளவாக்கிய சிவபெருமானே முருகக் கடவுளைத் தனக்கு மூலகாரணனாகக்கொண்டு வணங்குதலினால் மூலாத்திரியாம். நாடோறும் மூன்று மலர்களை அழகுபொருந்திய காவிக்கொடி பூத்தலின் இருணிரம்பிய காவியத்திரியாம். (இறை