பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்193

சிந்தா- காந்தரு. 17. செய். உரை. மலரிணர்க் கூந்தலென மாற்றுக. சிவலிங்கத்தையு மப்பருப்பத முடைத்தெனக் கூட்டுக.

(67)

 கடம்பணி குமர னான்முகன் றிருமால்
           கதிர்மணிச் சேடனா ரதன்றார்த்
 தடம்புயக் குலிசத் திந்திரன் செழுந்தீத்
           தமிழ்முனி பெயரினால் விளங்கும்
 இடம்படு தீர்த்தஞ் சிவகங்கை யெட்டு
           மியம்பிய நந்திநந் தினியும்
 மடந்தபு நும்மால் விளங்குமேழ் சுனையு
           மணிவரை யண்மையி னுடைத்தால்.

(இ - ள்.) கடப்பமாலையை யணிந்த முருகப்பெருமானும் திருமாலும் ஒளியோடுகூடிய மணிபொருந்திய ஆதிசேடனும், நாரதமுனிவனும், மாலையை யணிந்த புயத்தோடுகூடிய வச்சிராயுதத்தையுடைய இந்திரனம், செழித்த இனிமையாகிய தமிழ் முனிவனாகிய அகத்தியனும் ஆகிய இவர்கள் பெயரினால் விளங்குகின்ற தீர்த்தமேழும் சிவகங்கை யொன்றும் ஆகிய எட்டும், மேற்கூறிய நந்திநந்தினி யென்னும் நதியும், நுங்கள் பெயரால் விளங்குகின்ற ஏழு சுனைகளுமாகிய இவற்றை அழகிய தணிகை மலையானது அண்மைக்கண் உடையதாம்.

(68)

 நறுமணங் கமழுந் தாமரை நிகர்த்த
           நகைமுக மாறுமெல் லுமிழும்
 மறுவறு மணிகள் வயின்வயி னிமைத்து
           மல்கிருட் செறிவுகால் சீக்கும்
 அறுமணிக் குவடா யறுமுகத் திறையே
           யாயதா லடைந்தவ ருயிர்மேற்
 கொறுகொறுத் துழலும் வல்வினைப் பகையைக்
           கொலைபுரிந் தருளுமக் குன்றம்.

(இ - ள்.) நல்ல வாசனை வீசுகின்ற தாமரைமலரை யொத்த (முருகப் பெருமான்) விளங்குகின்ற திருமுகங்களானும், ஒளியைக்கக்குகின்ற குற்றமற்ற இரத்தினங்கள் இடமிடங்கடோறும் பிரகாசித்து நிறைந்த செறிவைத் துடைக்கும் ஆறழகிய சிகரங்களாகி அறுமுகக் கடவுளே யானதனால் ஆண்டடைந்தவர்க ளுயிரிடத்துக் கோபித்துச் சுழலுகின்ற வல்வினையாகிய பகையைக் கொலை செய்தருளும் அக்குன்றம்.

(வி - ம்.) ஆறுமுகங்களும் ஆறு சிகரமாகி யம்மலை அறுமுகப்பெருமான் திருவுருவாயிருந்தன வென்பார். "அறுமணிக் குவடாய் அறுமுகத்திறையே யாதலான்ழு என்றார். கொறு கொறுத்தல் - கோபித்தல்: குறிப்புச் சொல்லாகிய இரட்டைக்கிளவி. இதனை