பக்கம் எண் :

194தணிகைப் புராணம்

 "இனிச்சிறி தெழுந்து வீங்கி யிட்டிடை கோறும் நாங்க
           ளெனக்கொறு கொறுப்ப போலு மிளமுலைப் பரவை யல்குல்"

எனவரும் சிந்தாமணி சுரமஞ்சரியாரிலம்பகம் 46 ஆம் செய்யுளடியானு
முரை யானுமுணர்க.

(69)

 சேயிடை யிருந்து கேட்பினுந் தொழினுஞ்
           செப்பினும் சி்த்தம்வைத் திடினும்
 ஆயிடை வதித லாதிகள் செயினு
           மலகில்பல் பவத்தினு மீட்டும்
 மாயிரு வினையுஞ் சவட்டிமீ ளாத
           வரம்பிலின் புறுத்துவ தென்றால்
 காயிலை வேலோன் றணிகையின் பெருமை
           கட்டுரைக் கடங்குவ தன்றே.

(இ - ள்.) இத்தணிகை, சேய்மைக்கண்ணே ஒருவனிருந்து கேட்டாலும் வணங்கினும், சொல்லினும், மனதிற் றியானிப்பினும், அச்சேய்மைக்கண்ணே தங்குதல் முதலிய செய்யினும் கணக்கிட இயலாத பல பிறவியினின்று மீட்டும் பெரிய நல்வினை தீவினையாகிய இருவினைகளையும் கொன்று ஒரு ஞான்றும் திரும்பிவாரா நிலைமையாகிய வீட்டின்பத்தினைச் சேர்க்குமென்றால், பகைவரை வருத்துகின்ற தகட்டு வடிவத்தினையுடைய வேற்படையினையுடைய முருகக்கடவு ளெழுந்தருளியிருக்கின்ற தணிகைமலையின் பெருமை தொடுத்துச் சொல்லும் சொல்லளவிற் கடங்குவ தன்றே.

(வி - ம்.) சவட்டி - கொன்று; "பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டி" என்னும் பதிற்றுப் பத்தடியா னுணர்க. வரம்பிலின்பு - அளவிட முடியாத வின்பம்; வீட்டின்பம்.

(70)

 இன்னணஞ் சிறந்த வுற்பல வரையை
           யெய்தியாங் கினிதுவீற் றிருக்கும்
 மின்னவிர் நுதிவேல் வீரனைப் பணிந்து
           மேதக வதிந்தவ னருளால்
 துன்னிய மலவா தனைவிடை கொள்ளத்
           துலங்கிய சாக்கிரா தீத
 மன்னியின் புருவா யாணவ நிலைபோன்
           மருவுதி ரெனப்பணித் திட்டான்.

(இ - ள்.) இன்னணம் சிறப்புற்றனவாகிய காவியத்திரியை யடைந்து அவண் இனிதெழுந்தருளி யிருக்கின்ற மின்னலைப்போல விளங்குகின்ற கூர்மைபொருந்திய வேற்படையையுடைய முருகக் கடவுளை வணங்கி மேன்மைபொருந்த ஆண்டுத் தங்கி அப்பெருமானருளால் அனாதியாகப் பொருந்திய மலங்களின் வாசனை விடைபெற்றுச் செல்லச் சிவத்துவம் விளங்கிய சாக்கிராவத்தையின்
நின்மல