பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்195

துரியாதீதத்தைப் பொருந்தி ஆநந்தமே வடிவமாய், ஆணவத்தோ டத்து விதமானதுபோலக் (சிவத்துடனே) கலந்திருப்பீர்களெனத் திருவாய்
மலர்ந்தருளினான்.

(வி - ம்.) உற்பலவரை - காவியத்திரி. மலவாதனை - வாசனாமலம். இதனை "போதமே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும், வாதனை தாக்கு மாபோல்" எனவரும் காஞ்சிப்புராணச் செய்யுளானறிக. "ஞானத்தைப்பெற்று ஞேயத்தைக்கண்ட ஆன்மாவினுக்கு அக்காட்சி சலிப்படையும் வண்ணம் வாசனை தாக்கி வியாபக அறிவை ஏகதேசப்படுத்தலின் அதனையும் நீக்குதல் வேண்டுமென்பார் "மலவாதனை விடைகொள்ள" என்றார். சாக்கிராதீதம் - சாக்கிராவத்தையிலேயே நின்மல துரியா தீதத்தைப் பொருந்திநிற்றல். ஆணவமலத்தோடான்மா இரண்டறக் கலந்து நின்றதுபோலச் சிவத்துட னத்துவிதமாக் கலந்து நிற்றல்வேண்டு மென்பார். "ஆணவ நிலைபோல் மருவுதிர்" எனக் கூறினார். இதனை "ஆணவத் தோடத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோடத்துவிதம் சாரும்நா ளெந்நாளோ" என்னும் தாயுமானவர் திருவாக்கானும் "இருள்செய் கேவலம்போற் கலந்திருப்பதே முத்தி" என்னும் திருவானைக்காப் புராண அடியானும் உணர்க.

(71)

 அருளிய குரவன் றிருவடிப் போதி
           லருந்திறற் பெருந்தவ முனிவர்
 இருவிழி பொழிநீர் மண்ணுதல் புரிய
           வெழுந்தனர் பலமுறை வீழ்ந்து
 திருவடை யாளங் கூறிய முகத்தாற்
           றெரித்தனை மான்மியம் விரித்துக்
 குருபர வருளென் றிரந்தவன் முழுதுங்
           குறைவறத் தெருட்டிடத் தெளிந்து.

(இ - ள்.) திருவாய் மலர்ந்தருளிய பரமாசாரியன் திருவடித் தாமரைகளில் அரிய வல்லமையோடுகூடிய பெரிய தவத்தினையுடைய முனிவர்கள் இரண்டு விழிகளினின்றும் சொரிகின்ற நீரானது கழுவுதலைச் செய்ய எழுந்து பலமுறை வணங்கி அடையாளங் கூறிய முகத்தானே (அத்தலப் பெருமையினைத்) தெரித்தாய், அத்தலத்தின் பெருமையினை யெல்லாம் ஆசாரியர் பெருமானே விரித்துத் திருவாய்மலர்ந்தருளென்று யாசிக்க அவன் குறைவில்லாமற் றெரிவிக்கத் தெளிந்து.

(வி - ம்.) மண்ணுதல் - கழுவுதல். "மண்ணுதல்சென்ற ஒண்ணுதலரிவை" என்னும் குறுந்தொகைச் செய்யுளடியா னுணர்க. இரந்து தெளிந்து எனக் கூட்டுக. அவன் சனற்குமரன்.

(72)

 மறுவலும் வணங்கிப் புறவிடை கொண்டு
           மடங்கனோக் கெனமனங் குரவன்
 நறுமலர்ப் பதத்து நாமவே லிறைவ
           னளிர்வரைக் குன்றினும் படர