| எறிகதிர் வெள்ளி வரைதணந் தாங்க | | ணெய்திநா யகனடி பணிந்து | | நிறையுள மகிழ்ச்சி தலைசிறந் தனராய் | | நெடுவரைத் தெனாதுழிச் சார்ந்து. |
(இ - ள்.) மறுபடியும் வணங்கி (மனமாண்டுத் தங்க)ப் புறத்தே விடைபெற்றுக்கொண்டு (முன்னும்பின்னும் நோக்கும்) சிங்கநோக்குப் போல மனமானது ஆசாரியனது வாசனை பொருந்திய தாமரைமலர் போன்ற பாதத்தினிடத்தும், அச்சத்தைத் தரும் வேற்படையையுடைய முருகக் கடவுளின் குளிர்ச்சி பொருந்திய மூங்கிலினையுடைய மலையினிடத்தும் செல்ல ஒளியை வீசுகின்ற வெள்ளியங்கிரியினை நீங்கித் தணிகையின்கண் வந்து பொருந்து முருகக்கடவுளின் பாதங்களை வணங்கி நிறைந்த வுள்ளத்தின்கண் உவகை தலைசிறக்கப் பெற்றவர்களாய் நீண்ட தணிகை வரையின் தென்றிக்கிற் பொருந்தி. (வி - ம்.) மடங்கனோக்கு - சிங்க நோக்கு. நாமம்+வேல்=நாமவேல் என ஈறுகெட்டது. "மவ்வீறொற்றழிந்" என்னும் நன்னூற் சூத்திர விதிப்படி. தெனாது - மரூஉ. (73) | தொழித்தளி முரலு நந்தன வனமுந் | | துறுமலர்ப் பொதும்பரு மணிகள் | | கொழித்தலை சுருட்டுஞ் சுனைகளும் படுத்த | | கொள்கையின் விளங்கறை பலவும் | | செழித்தவிண் ணமர ருள்ளமுங் கவர்க்குந் | | திருக்குலாய் மும்மலச் செருக்கும் | | அழித்தெழு மருட்கோ ராகர மான | | வற்புதச் சூழல்கண் டமர்ந்து. |
(இ - ள்.) ஆரவாரித்து வண்டுகள் முழங்குகின்ற நந்தன வனங்களும், துறுத்த மலர்களோடு கூடிய பூஞ்சோலைகளும், முத்துக்களை வீசி அலைகள் மறித்து வருகின்ற சுனைகளும், பதித்துவைத்த தன்மையின் விளங்குகின்ற பாறைகள் பலவும் (எல்லா வளங்களானும்) செழிப்புற்ற தேவருலகத்தின்கண்ணுள்ள தேவர்கள் மனத்தையும் கவருதற்கேதுவாகிய செல்வங்களான் விளங்கி, மும்மலங்களின் செருக்கையும் கெடுத்து அருளினுக்கோ ரிருப்பிடமான வியப்பைத் தரத்தக்க விடத்தைக் கண்ணுற்றதன்கட் டங்கி. (வி - ம்.) தொழித்து - ஆரவாரித்து. "கழித்த கடிப்பினையும் கைவளையும் மாலையும் களைந்து முத்துந் - தொழித்த நறுஞ்சாந்தும் சுண்ணமும் பன்மணியும் கலனுஞ் சிந்தி" எனவரும் சிந்தாமணி (முத்தி-371) செய்யுளடியானு முரையானு முணர்க. படுத்த-பதித்த. அறை - பாறை. "படுத்துவைத்தன்ன பாறைமருங்கின்" என்னும் மலைபடுகடாம் (15) அடியானும் உரையானு முணர்க. (74) | வைகலும் விதியா னாட்கடன் கழிப்பி | | மருவுமான் மார்த்தபூ சனையை |
|