பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்197

 நைகர மில்லா வன்பொடு நவிற்றி
           நறைகமழ் கடம்பணி தாரான்
 செய்கழற் சரண பங்கயம் போற்றித்
           தேசிக னருளிய குறியால்
 பொய்கழ லுள்ள நிட்டையைக் கூடும்
           பொருவறு சூழ்ச்சிகைக் கொண்டு.

(இ - ள்.) நாடோறும் விதிப்படி காலையிற் செய்யவேண்டிய கடன்களைச் செய்து பொருந்திய ஆன்மார்த்த பூசையை வருத்தம் சிறிது மில்லாத அன்புடனே செய்து வாசனை வீசுகின்ற கடப்பந்தாரினை யணிந்த முருகக்கடவுளின் சிவந்த வீரக் கழலோடுகூடிய பாதமாகிய தாமரைகளை வணங்கி ஆசிரியன் அருளிய அடையாளங்களால் பொய் நீங்கிய மனமானது நிட்டையினிடத்துப் பொருந்தும் ஒப்பில்லாத ஆராய்ச்சியை மேற்கொண்டு.

(வி - ம்.) கழிப்பி - செய்து. நைகரம் - துன்பம். நவிற்றி - செய்து. குறி-அடையாளம். செய்ய வென்பதன் ஈறுதொக்கது. சூழ்ச்சி-ஆராய்ச்சி.

(75)

 ஆதியீ றில்லா வைந்தெழுத் தைந்து நிலையினு மாம்வகை யுணர்ந்து
 தீதுசே ரிரண்டு நிலையினு நீங்கித் திகழ்நிலை யிரண்டினும் பயின்று
 பேதமே யபேதம் பேதமோ டபேத மெனப்படும் பெருநிலை யாய
 ாதிரு ஞான ஞேயமுந் திகழா நன்மையிற் றொன்மைய ரானார்.

(இ - ள்.) தோற்றமு மிறுதியும் இலவாகிய பஞ்சாக்கரத்தினை, சாக்கிரம், சொப்பனம், கழுத்தி, துரியம், துரியாதீதமென்னு மைந்த வத்தையின் கண்ணும் (நிற்கும் வசைக்கேற்ற) ஓதுமுறையை (ஆசிரியன்பாற்) கேட்டுணர்ந்து குற்றம்பொருந்திய சாக்கிரம் சொப்பன மென்னும் இரண்டவத்தையினின்றும் நீங்கி (சிவத்துவம்) விளங்குதற்குரிய துரியம் துரியாதீதமென்னும் மிரண்டவத்தையின் கண்ணும் பழகி, பேதம் அபேதம் பேதாபேதம் என்று சொல்லப்படும் மூன்றுந்தன்கட் டோன்ற நிற்கின்ற நின்மல துரியாதீதமாகிய காண்பானும் காட்சியும் காணப்படு பொருளுமாய்ப் பகுப்புற விளங்காத சிவானந்தப் பேற்றின் பண்டைப் பரிசினையுடைய ராயினரென்க.

(வி - ம்.) சுத்தாவத்தையைந்திலும் உயிரும் முதல்வனும் மாறி அக்கரங்கள் மாறி நிற்றன் முறைக்கு ஏற்ப மாறியோதல் வேண்டுமாதலின் ஐந்தெழுத்தினை ஐந்து நிலையினுக்கேற்ப ஆம்வகை யுணர்ந்தென்றார். இங்குக் கூறிய ஐந்தவத்தைகளும் சுத்தாவத்தை யென்க. இனியொரு சாரார் இரு நிலையினும் நீங்கியென்பதற்குச் சாக்கிரம் சுழுத்தியாகிய இரண்டு நிலையினின்றும் நீங்கியெனவும், "திகழ்நிலையிரண்டினும் பயின்" றென்பதற்கு சொப்பனம் துரியமாகிய இரண்டு நிலையினும் பழகுதல் செய்தெனவும் கொள்வர். துரியாதீதத்திற் றொன்மை போலானாரெனக் கூட்டுக. ஐந்தெழுத்தும் அவ்வைந்து நிலையினும் நிற்கு முறையாகிய ஓது முறை. "தீதுசேரிரண்டு நிலையாவன -