விண்டு, உருசிமுனி சந்தனத்தையணிந்த ஆகிருதி என்பவளைக் கூடிப்பெற்ற சுயக்கினனென்னும் பெயரினையுடையான். முனிவர்கள் கூரிய மதியினையுடைய புலத்தியன் முதலாகக் கொண்ட எழுவரென்க. (வி - ம்.) இவ்வெண்பத்தொன்றாஞ் செய்யுள் முதல் தொண்ணூறாம் செய்யுள் வரை, மனு அரையன், அவன் புத்திரர், தேவர், இந்திரன், திருமால், முனிவர் பெயர் முதலியன முறையே வருமாறுணர்ந்து கொள்க. (81) | தோற்று மிரண்டா மனுவேந்தன் சுவாரோச் சிடனே யவன்மைந்தர் | | ஆற்ற றுயுமத் தாதியர்க ளமரர் திவிடி தனைமுதலோர் | | வீற்று மகவா னுரோச்சனன்மால் வேத சரசு திவிடிதைபெற் | | றேற்ற விபுபு முனிவரர்க ளூர்ச்சத் தம்பன் முதலெழுவர். |
(இ - ள்.) இரண்டாவது மனுவரையன் சுவரோச்சிடன், இவன் புதல்வர்கள், பிறர் வலியைக் கெடுக்கின்ற மத்தாதியர்கள். தேவர்கள் திவிடி முதலானவர்கள். வேறாகிய இந்திரன் உரோச்சனன். விண்டு வேதசரசென்பவன் திவிடிதை யென்பவளைக் கூடிப் பெற்றுத் தாங்கிய விபுபு என்பவனாம். முனிவர்கள் ஊர்ச் சத்தம்பன் முதலாகிய எழுவர்களாவர். (வி - ம்.) இனித் திவிடிதன் ஐ எனப் பிரிப்பாருமுளர், திவிடி தன்னை யென்பதிற்றன் ஐ சாரியை. (82) | மூன்றா முறைவேந் துத்தமனே மூரிப் பவனன் முதலானோர் | | ஆன்ற மைந்தர் சத்தியன்முன் னானோர் சுரர்சத் தியசித்து | | வான்ற னிறைமால் சூனுருதைமறைதேர் தரும னெனுமுனிவற் | | கீன்று வளர்சத் தியசேன னெழுவர் பிரம தாதிகளே. |
(இ - ள்.) மூன்றா முறைமையின் வந்த மனுவரையன் உத்தமனாகும். அவன் புதல்வர்கள் வலியையுடைய பவனன் முதலானவர்கள். தேவர்கள் சத்தியன் முதலானவர்கள். தேவருலகத் திறைவனாகிய இந்திரன் சத்திய சித்தென்பவனாம். விண்டு வேதங்களை யாராய்ந்தறிந்த தருமனென்னு முனிவனைச் சூனுருதை யென்பவள் கூடி யீன்று வளர்த்த சத்தியசேன னென்பவனாம். முனிவர்கள் பிரமது முதலிய எழுவர்களும் ஆவர். (வி - ம்.) மூரி - பெருமை. வான் - தேவலோகம். (83) | பெருமை பிறங்குஞ் சனற்குமரன் பெருமை மலர்த்தாண் முடிசூடி | | அருமை மறையந் தந்தெளிவா யமைந்த சைவ சித்தாந்தம் | | ஒருமை யன்பிற் கேட்டுணர்ந்த வுயர்ந்த முனிவ ரிவர்கண்டீர் | | இருமை வழங்கு மிதுகாறு மியைந்தோர் தமையு மினிக்கேண்மின். |
(இ - ள்.) பெருமை விளங்குகின்ற சனற்குமர முனிவனது தேன் பொருந்திய தாமரை மலர் போன்ற பாதங்களை முடியின் கண்ணேயணிந்து அருமையாகிய வேத முடிவின் தெளிவாகிப் பொருந்திய சைவ |