| தரும னிக்கு வாகுவே சையன் றிருட்ட நாபன்னே | | மருவும் விடபத் துவசனென மைந்தர் பதின்ம ரவன்றனக்கே. |
(இ - ள்.) குற்றமில்லாத ஏழாவது மனுவரையன் வைவச்சுதனாகும். இவனுக்குப் பிள்ளைகள் சாதத்தேவர்கள் பரன், சர்வவித்தமன் மானுடர், கசேரு, தருமன், இக்குவாகு, சையன், திருட்டநாபன் பொருந்திய விடபத்துவச னெனப் பதின்ம ராவரென்க. (வி - ம்.) ஆல் - அசை. சாதம் - பிறத்தல். (90) | வெய்யோன் விசுவ தேவர்வசு விடப மருத்து வசுவனியான் | | நையா வமரர் புரந்தரனா னாக நகரஞ் செகிற்பரித்தோன் | | எய்யா விறன்மால் காசிபனுக் கெழுந்து பரந்த களபமுலை | | மையார் தடங்க ணதிதிமணி வயிறு வாய்த்த வாமனனே. |
(இ - ள்.) கெடாத தேவர்கள், சூரியன், விசுவதேவர், வசு, விடபமருத்து அசுவனியாகும், இந்திரன் இஞ்ஞான்று தேவலோகத்தைத் தோளின்மேற் றாங்கினவனாவான். இளையாத விறலோடு கூடிய விண்டு காசிப முனிவனுக்கு உயர்ந்த பரந்தனவாகிய கலவைச் சந்தனத்தை யணிந்த முலையினையும், மைதீட்டிய கண்ணினையுமுடைய அதிதி யென்பவளுடைய அழகிய வயிற்றிற் பொருந்திய வாமனனாகும். (வி - ம்.) செகில் - தோள். அசுவனியால், புரந்தரனால் என்பனவற்றில் ஆல் அசைகள். (91) | வினையில் காசி பன்வசிட்டன் விசுவா மித்தி ரன்சமதக் | | கினியத் திரியே கவுதமனே கேழில் பரத்து வாசனென | | முனிவ ரெழுவ ரிதுகாறு முறைசெய் மனுவே ழனுண்மூன்றாம் | | மனுவந் தரத்து முனிவரென வகுத்தா மறிமோ வெனக்கிளந்து. |
(இ - ள்.) முனிவர்கள், வினைத்தொடர்பு சிறிதுமில்லாத காசிபன், வசிட்டன், விசுவாமித்திரன், சமதக்கினி, அத்திரி, கவுதமன், ஒப்பில்லாத பரத்துவாச னென்கின்ற வெழுவருமாவார். இற்றைமுறை செய்த ஏழு மனுவினுள் வைத்து மூன்றா மனுவந்தரத்துக்கூறிய முனிவராவரென்று விரித்துக் கூறினாம்; அறியுங்க ளெனச்சொல்லி. (வி - ம்.) கேழ் - ஒப்பு. "கேழ்நிற மொளியொப் பாகும்" என்னும் நிகண்டா னறிக. அறி+மோ. மோ: முன்னிலையசை. "கொள்வாரும் கள்வரும் நேர்" என்புழிப்போல அறிவீரென்னும் முன்னிலைப்பன்மை யீறுகெட்டு நின்றது. இம் முனிவர்களே 77 ஆம் செய்யுளிற் கூறிய முனிவர்கள். (92) | கூற்ற நடுங்கு மருஞ்சாபக் கோணை யாற்ற லிருந்தவத்தீர் | | தோற்ற மரணங் கெடவின்பத் துறையு ளழுத்து மருளிரண்டில் | | தேற்று மமல மொழிமயமாய்த் திகழு மருளிம் மான்மியமே | | போற்றி யினிது கேண்மினெனப் பொருவில் சூதன் சொலப்புக்கான். |
|