பக்கம் எண் :

206தணிகைப் புராணம்

ஞானபோத இரண்டாஞ் சூத்திர பாடிய வசனங்களின் கருத்தா யமைந்திருத்தலை யுணர்க. வீ - பூ. எண்குணமினைய என்பதனை "கோளில் பொறியில்" என்னும் பொதுமறை யுரையா னுணர்க. அட்டகாசம் - சிரிப்பு.

(1)

வேறு

 கன்மிசை மஞ்ஞையி ருந்துக லாபம்வி ரித்தாட
 வின்மணி சிந்தரு வித்திர டாழ்ந்துவி ழுந்தோற்றம்
 முன்னிய சேடனம் மஞ்ஞையை யஞ்சிமு ரன்றொல்லை
 தன்னுல கெய்துறு தன்மைத குங்கயி லாயத்தில்.

(இ - ள்.) மலையின்மேலே மயிலானது தங்கித் தோகையினை விரித்தாடா நிற்க, ஒளியோடுகூடிய இரத்தினங்களைச் சிந்துகின்ற அருவியின் றிரட்சி இறங்கிவிழுகின்ற தோற்றமானது, கைலைக்கட் பொருந்திய ஆதிசேடன் அம்மயிலினுக் கச்சுற்றுச் சீறி விரைவாகத் தனது பாதாளவுலகினுக்குப் பொருந்துகின்ற தன்மை விளங்காநிற்கும் கைலைமலையின்கண்.

(வி - ம்.) கல் - மலை; "கன்மிசை மயிலாலக் கலங்கி யூரலர் தூற்ற" என்னும் (27) பாலைக் கலியானுணர்க. முரன்று - ஒலித்து; ஈண்டுச் சீறி யென்க. முன்னிய - அடைந்த. தன்னுலகு - பாதாளவுலகம். மஞ்ஞையஞ்சி - மஞ்ஞைக்கஞ்சி, வேற்றுமை மயக்கம்.

(2)

 மங்கல வெள்ளைவ ழித்தும லர்த்துகண் மேலட்டிக்
 கொங்குயிர் தாமம ணிந்துகொ ழும்புகை மிக்கார்த்தி
 வெங்களி நல்குவி தானம டுத்துவி ளக்கேந்திப்
 பொங்கிவ ளங்கள்பொ லிந்தொளிர் மண்டப வுட்சூழல்.

(இ - ள்.) சந்தனத்தான் மெழுக்கிட்டு மலர்ப்பொடிகளை யதன்மேலெழுப்பி வாசனையை வெளியிடுகின்ற மாலைகளால் அலங்கரித்து மிக்க வாசனைப் புகையை நிறைவித்து விருப்பத்துடனே களிப்பைத் தருகின்ற மேற்கட்டியைக் கட்டித் திருவிளக்கினையேற்றிச் செல்வங்கண் மிகுந்து விளங்குகின்ற மண்டபத்தி னுள்ளிடத்தில்.

(வி - ம்.) மங்கல வெள்ளை - சந்தனம்; இதனை "மங்கலவெள்ளை வழித்துமுத் தீர்த்தபின், கொங்கலர் கோதையர் கொண்டகமெய்தி" என்னும் சிந்தாமணி (கேம : 66) செய்யுளடியானு முரையானு முணர்க. வழித்து - மெழுக்கிட்டு. அட்டி - அப்பி. கொங்கு - வாசனை. ஆர்த்தி - நிறைத்து. வெம்மை - விருப்பம். விதானம் - மேற்கட்டி. மடுத்தல் - ஈண்டுக்கட்டல். உட்சூழல் - உள்ளிடம்.

(3)

 தோற்றிய வாறிரு மூன்றுறு தத்துவ சோபானம்
 பாற்றுதை யப்பயில் வித்தப சும்பொன ணைச்சேக்கைக்
 கோற்றொடி மங்கையி டத்திலி டைக்கும ரப்புத்தேள்
 வீற்றிருப் பப்பரன் வீற்றிருந் தானொரு நாண்மேனாள்.