பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்209

நீங்குகின்ற பொருளாய மேலானவனே! உடனாகநின்று ஆன்மாக்களைத் தொழிலிற் புகச்செய்து மயக்கவுணர்வுக் கேதுவாகிய வினைப்பயனனுபவ ஒழிவின்கட் சலிப்புற்று எழுந்தொறு முயிர்களை எஞ்சிய வினைப்பயன்களையும் அவ்வுயிர்கள் சலியாவண்ண முண்பிக்கின்ற அருளினிறைவே! தெளியும்படியான அறிவில்லாதவர் அடைதற்கருமையாகிய நிறைந்த தேவாமுதம் போன்றவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாகும்.

(வி - ம்.) பலபேதம் - நவவிதபேதம்; அவை, சிவம் , சத்தி, விந்து, நாதம் என அருவம் நான்கும், பிரமன், விண்டு, உருத்திரன், மகேசுரன் என வுருவம் நான்கும் சதாசிவமாகிய அருவுருவமொன்றுமாக ஒன்பதாம். இவற்றுள், சத்தி விந்து என்னுமிரண்டும் சத்திபேத மென்க. உயிர்கள் மலத்தின் வழி நிற்குங்காறும் மாயை கன்மங்களும் இருளாய் நிற்குமென்னும் சுருதிபற்றி "இருளும் வினை" என்றார். அது, "மாயை மாமாயை, மாயாவருமிருவினையின் வாய்மை, ஆயவாருயிரின் மேவுமருளெனின் - இருளா நிற்கும்" எனப்புடை நூலாசிரிய ரருளியவாற்றானுமறிக. உடனின்று - உடனாக நின்று. அங்கு - எஞ்சிய வினையைத் துய்த்தலி2்கண். எய்யாமை - சலியாமை.

(8)

 காட்டா கியநின் னருளுண் மையினைக்
           கருதா துபுசிப் புவினைத் திறமே
 வேட்டா "முயிர்க் கவையாய் மிடையா
           மேன்மே லுமுயர்த் தருள்வித் தகனே
 வாட்டா ணவம்வாட் டியுடற் பொறைவிண்
           மணிமுன் னர்விளக் கெனமாய்ப் பவனே
 சேட்டா ரணமுந் தெரியா தயருந்
           தேக்கா ரமுதே சரணஞ் சரணம்.

(இ - ள்.) காட்டுகின்ற பொருளாகிய நினது திருவருளுண்மைத் தன்மையினைச் சிந்தனை செய்யாது போகத்தை யனுபவிக்குந் தொழிலின் வகையே விரும்பி யப்போகத்தின் மூழ்குகின்ற உயிர்களுக்குப் போகமாகப் பொருந்தி (அவ்வுயிர்கள் போகத்தை நுகர்ந்து தொலைத்த பின்னர்ச் சோபான முறைப்படி மேன்மேலு முயரச்செய்கின்ற ஞானவடிவுடையவனே! (உயிர்களை) வருத்துகின்ற ஆணவமலத்தினைக் கெடுத்து உடற்பாரத்தினைச் சூரியன் முன்னருள்ள விளக்கென்று சொல்லும்வண்ணம் கெடுப்பவனே! பெருமை பொருந்திய வேதங்களும் (இயற்கை நிலையினை) யறிவது சோர்வடையுமாறு நிற்கும் தேவாமுதம் போன்றவனே! நினதாள்கள் எளியேனுக்குப் புகலிடமாகும்.

(வி - ம்.) காட்டு: வினைமுதற் பொருள் விகுதி புணர்ந்து கெட்டது. பெத்தமுத்தி யிரண்டினும் உயிரறிவை விளக்குவதாகலின், இறைவன் திருவருளைக் "காட்" டெனக் கூறினார். வினைத்திறம் - தொழிலின்வகை. வேட்டு - விரும்பி. ஆழும் - அழுந்தும். மிடையா-செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். "ஏகனாகி நின்றிணையடி யுணர்வார்க்குப், போகமாய் விளைதலோடு" புசிப்பு வினைத்திறமேவேட்டாழு முயிர்களுக்கு அவ்வுயிர்கள் விரும்பிய போகமாயும் விளைவானென்பது தோன்ற