(இ - ள்.) தலைவனே மும்மதங்களாகிய கான்யாறு வண்டினங்கள் கப்பமாகக்கொள்ள விரைந்து செல்லுகின்ற கரத்தினையுடைய மலைபோன்ற யானைமுகக் கடவுளைப்போல, எளியேனை மகனாந்தன்மைக்கணிறுத்தி (வேத முதலிய கலைகளின் பொருளை யெல்லாம்) கிருபை செய்தாய். இப்பிரணவப் பொருளையு மெளியேனுக்குத் தெரிவித்தருளுதற்குச் சிறிதும் சந்தேகமின்றெனத் தெளிந்து திருவருளானே தேவரீரை வந்தடைந்தனன். (வி - ம்.) கலுழி - கான்யாறு. மகன்மை-மகனாந்தன்மை. அம்ம: இடைச்சொல். இது - பிரணவப்பொருள். "அவனருளாலே யவன்றாள் வணங்கி" என்பது முறையாகலின் "அருளாலணவினேன்" என்றார் செம்மல்: அண்மைவிளி. அணவினேன் - அணுகினேன். (15) | திருவு ளக்கருணை செய்திதுதெ ளித்த ருளென | | இருண்ம லப்பகையி டிக்குமற வாழி யருளும் | | பொருவி லாகமம றைத்திரள்பு ராண முழுதாய் | | மருவு மக்கரமொ ரைந்தனொடு மானு மிதுவே. |
(இ - ள்.) ஆணவமலப் பகையாகிய கரையினை (மோதி) இடிக்கின்ற தருமக்கடலாகிய சிவபெருமான் திருவுளக் கருணை செய்து இப்பிரணவப் பொருளைத் தெளிவாயென்று சொல்வான். ஒப்பிலவாகிய ஆகமங்களும், மறையின் கூட்டங்களும், புராண முற்றிலுமாகிப் பொருந்தும் ஐந்தக்கரங்களினோடு இப்பிரணவமொப்பாகும். (வி - ம்.) தெளிந்தருள் என்பது விகாரம். இருண்மலப்- பகை ஆணவமாகிய பகை. அறவாழி - தருமக்கடல்: "அறவாழியந்தணன்" என்னும் திருக்குறளானறிக. ஐந்தக்கரங்களும் எல்லாக் கலைகளுமாமென்பதனை "அருணூலு மாகமமு மல்லாது மைந்தின், பொருணூல் தெளியப்புகின்" என்னும் திருவருட்பய னானுணர்க. மானும் - ஒக்கும். இஃதேகதேசவுருவகம். (16) | ஐந்தெ ழுத்துமொரு சார்மொழிக ளைந்தெ னவுமாம் | | மைந்து பெற்றவெமை யெமுழுது ணர்த்தி வழுவா | | தைந்தெ ழுத்துமொழி யொன்றெனவ ழங்கி வருமால் | | மைந்த தேர்தியென வான்பொருடொ குத்த ருளினான். |
(இ - ள்.) மைந்தனே ! ஐந்தக்கரங்களும் ஒரு பகுதிக்கண் ஐந்து மொழிகளென்று சொல்லத்தகும் (அவ்வக்கரங்கள்) வலிமை பெற்ற (சிவமாகிய) எம்மையே எஞ்சா துணர்த்திக் குற்றமிலவாகி ஐந்தெழுத்தாலாகிய மொழியொன்றென்று சொல்லும் வண்ணம் வழங்கப்பட்டு வரும் தேர்வாயென்று மேலாகிய அப்பிரணவப் பொருளினைத் தொகுத்துச் சொல்லினான். (வி - ம்.) பஞ்சாக்கரங்களி னொவ்வோ ரெழுத்தும் தனித்தனி யொவ்வொரு பொருளை யுணர்த்தலின் "மொழிகளைந்தெனவுமாம்" எனக் கூறினார். இதனை "அந்தியும் நண்பகலு மஞ்சுபதம் சொல்லி" எனவரும் தேவாரத் திருவாக்கானறிக. இவ்வக்கரங்களைந்தும் சேர்ந்து ஒரு மொழியாக நின்று சிவமாகிய ஒரு பொருளை யுணர்த்தலின் "ஐந் |