| வைத்த வேலிளவ றாட்டுணைவ ணங்கி யருளான் | | மெய்த்த வன்பின்விகிர் தன்சரண மெய்தி னர்களால் | | பைத்த வெண்டிரைநெ டுங்கடல்ப ரந்த வுலகின் | | கொத்து யிர்த்தவனு மாங்கவரு டன்கு றுகுவான். |
(இ - ள்.) கூர்மை பொருந்திய வேற்படையினை யுடைய முருகப் பெருமான் றிருவடித் துணையினை வணக்கஞ்செய்து அவனருளினால் உண்மையாகிய அன்பு தங்களுள்ளத் தெழுதலினால் (செத்துப் பிறக்கின்ற ஏனைய தேவர்கணிலையினின்றும்) வேறுபட்டவனாகிய சிவபெருமான் றிருவடியை யடைந்தார்கள். பரவிய வெள்ளிய அலையினையுடைய நீண்ட கடலாற் சூழப்பெற்ற உலகங்களின் தொகுதியைப் படைத்தவனாகிய பிரமனுமத் தேவர்களுடன் அடைகின்றவன். (வி - ம்.) வை - கூர்மை. மெய்த்த - உண்மையாகிய. விகிர்தன் - வேறுபாடுடையவன். இனிப் பிறராற் றோற்றுவிக்கப் பெறாதவனெனக் கோடலுமாம். இன் - ஐந்தாவதேதுப் பொருட்டு. உலகின் கொத்து - உலகின் தொகுதி. குறுகுவான் என்பதில் வகர ஒற்று நிகழ் காலம் காட்டிற்று. இதனை, ஆசிரியர் நச்சினார்க்கினியர் "கடதற" என்னு முதற் குறிப்பினையுடைய வினையியற் சூத்திரத்துரையில் "இனிப் பகரவகரங்கள் நிகழ்காலத்தும் வரும். "கூடநீர் நின்ற பெற்றி கண்டிப்பானோக்கு வேற்கு" என்புழிப் பார்க்கின்றேற்கு எனப் பொருள் தந்தவாறு காண்க" என்பதனானும், "துணிகொண்டிலங்கு சுடர்வேலினோடு வருவானி தென்கொ றுணிவே" என்னும் சூளாமணிச் செய்யுளடியானு முணர்க. (21) | கற்றல் கேட்டலொடு காழறுபெ ருந்த கைமையும் | | முற்றி னாருமட ரூழினைமு னிந்த மைவரே | | அற்றை ஞான்றிளவ லென்றுளம கந்தை யெழலும் | | உற்று வந்தனைபு ரிந்திலனொ துங்கி னனரோ. |
(இ - ள்.) கல்வி கேள்விகளோடு குற்றமற்ற பெருந்தன்மையையு மடைந்துள்ள பெரியார்களும் (தாம்) வருந்துதற்கேதுவாகிய தீயவூழினை நீக்கி யமைவரோ? அமையார். ஆதலால், (பிரமன்) அஞ்ஞான்று (முருகப்பெருமானை) இளமைப் பருவமுடையா னென்றுள்ளத்தின்கண் அகங்காரம் தோன்றப் (அவனை) பொருந்தி. வணக்கஞ் செய்யாது ஒருபுடை யொதுங்கிச் சென்றனன். (வி - ம்.) காழ் - குற்றம். அடரூழ் - தீயவூழ். எழலும் : உம் மீற்றுவினையெச்சம். ஒதுங்குதல் - நடத்தலெனினுமாம். (22) | கோட்டி ளங்கதிர்ம திப்புனல்கு ளிக்கு முடியோன் | | வேட்ட நல்வரம ளிப்பவவண் மீண்ட பொழுதும் | | ஓட்டை நெஞ்சினனி றைஞ்சிலனொ ழிந்தி டலுமவ் | | வேட்டை யூழினனி கந்தமையு ளத்தின் மதியா. |
(இ - ள்.) வளைந்த இளமையாகிய கிரணங்களோடுகூடிய பிறைச்சந்திரன் கங்கை நதியின்கட் குளித்தற் கேதுவாகிய திருமுடியினை |