யுடைய சிவபெருமான் (பிரமன்) விரும்பிய வரங்களையருள அவ் விடத்தினின்றும் நீங்கிய காலத்தும், அறிவறைபோகிய நெஞ்சினை யுடையனாகிய பிரமன் வணங்கானாகிச் செல்ல அவ்விளைத்த வூழினையுடைய பிரமன் நீங்கிய தன்மையை யுள்ளத்தின்கண் மதித்து. (வி - ம்.) ஓட்டை நெஞ்சு - அறிவறைபோகிய நெஞ்சம். ஏட்டை - இளைப்பு இளைத்தவூழெனவே ஆகூழில்லாதவ னென்பது தோற்றம். இகந்தல் - நீங்கல். (23) | அண்ட கோடிகள னைத்துமவை யாக்கி நிறுவும் | | அண்ட ரோடெளித ழற்றுமெரி வாய்க்க ணுதவிப் | | பண்டு போலெவையு மாக்கியளி பாய்த்தும் விழிகள் | | மண்டு கோபவெரி யானனிவ யங்கி மறல. |
(இ - ள்.) பல கோடிக்கணக்கான அண்டங்களையும் அவ்வண்டங்களைப் படைத்தளிக்கின்ற தேவர்களுடன் எளிதாகக் கனற்றுமங்கியின்கட்பெய்து முன்போலவே யாவற்றையும் படைத்துக் கருணை பரந்த விழிகள் பொருந்திய கோபாக்கினியான் மிக விளங்கி மாறுபட. (வி - ம்.) நிறுவும் - நிலைபெறுத்தும். அழற்றும் - கனற்றும். பாய்த்தல் - பரவுதல். மறல - மாறுபட "பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு, நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி, வாளைவா யுறைப்ப நக்கி வராலொடு மறலு மென்ப" என்னும் சிந்தாமணி (பதுமையா. 33) செய்யுளானு முரையானு முணர்க. (24) | தந்தை முந்திளவ றன்னுழிய லாது பிறர்பால் | | மைந்தி னாற்றணிவி லாதவிறல் வாகு வைவிளித் | | திந்த நான்முகனி ரும்புவன மாக்கு மெறுழின் | | சிந்தை வைத்திடுசெ ருக்கொடுத ருக்கி வருவான். |
(இ - ள்.) தன் றந்தையின்மாட்டும் மூத்தபிள்ளையார்மாட்டும் தன் மாட்டுமல்லது ஏளையோரிடத்து வலியினாற் சிறிதும் தணிதலில்லாத வீரவாகுவை யழைத்து இந் நான்முகத்தோடுகூடிய பிரமன் பெரிய புவனங்களைப் படைக்கும் வலியின்கண் மனத்தைச் செலுத்திய களிப்பினோடு தருக்கடைந்து வருகின்றான். (வி - ம்.) தந்தை - சிவபெருமான். முந்திளவல் - விநாயகர். தன் - ஈண்டுமுருகன். வருவான் : வகரவொற்று நிகழ்கால முணர்த்துதல் முன்னர்க் கூறினாம். ஆண்டுக் காண்க. (25) | எம்மை யேதுமுணர் கின்றிலனி யம்பு மறையும் | | மும்மை வையகமு முன்றொழுதல் கண்டு மறிவு | | செம்மை பெற்றிலனு டற்றவரு தீவி னையினைக் | | கொம்மை கொட்டினன்வி ரைந்தெதிர் கொணர்ந்து விடுதி. |
(இ - ள்.) எம்மைச் சிறிது முணர்கின்றா னிலன். (எமதிற மைக்குணங்களைப் பல்லாற்றானும் விரித்துக்) கூறும் வேதங்களும் |