பக்கம் எண் :

218தணிகைப் புராணம்

 செங்கை வச்சிரவ லாரிதிகழ் கோகி லவுரு
 இங்கும் வந்திறகி றுங்கொலென மாழ்கி யிரிய.

(இ - ள்.) அக்கினியைக் கக்குகின்ற வலிமைபொருந்திய சக்கரப் படையானது இக்காலத்தும் (நம்மைவிட்டு) நீக்கத்தின்கட் பொருந்துமேயென்று ஒப்பற்ற விண்டுவானவன் மறைந்துசெல்ல, சிவந்த கரத்தின்கண் வச்சிரப்படையை யுடைய இந்திரன் விளங்குகின்ற குயில் வடிவ மிங்கும் வரப்பெற்று இறகுகளானவை நாசமாகுமே யென்று வருந்தியோட.

(வி - ம்.) உம்மைகளிரண்டும் இறந்தது தழீஇயன. தக்கன் யாகத்தி னிகழ்ந்த பரிபவத்தினைக் குறித்தலின். இகவு - நீக்கம். இந்திரன் கோகில வுருக்கொண்டா னென்பதனை "புரந்தரனாரொரு பூங்குயிலாகி, மரந்தனி லேறினா ருந்தீபற" என்னும் மணிவாசகத்தா னறிக.

(29)

 நெரித்த வாண்முகநெ ரித்தினுமி றக்க வருமே
 தெரித்தி லேமெனம றிந்துமதி திக்கி னடைய
 வரித்து வைத்தனவெ யிற்றுநிரை வாட்க ணுகுமேல்
 தரித்தி லேமெனவ ருக்கர்தளர் வோடு சுழல.

(இ - ள்.) வீரபத்திரரால் நெரிக்கப்பெற்ற ஒளிபொருந்திய முகம் இப்பொழுது நெரிக்கப்பெற்றுச் செல்ல நேருமே தெரிந்திலேமென்று மடங்கி்ச் சந்திரனானவன் திசைகளிற் போய்ச் சேர நியமித்து வைத்தாலொத்த பற்களின் வரிசையும் ஒளிபொருந்திய கண்களும் சிந்துமேயானால் உயிர்தரித்திருக்க மாட்டோமெனச் சூரியர் சோர்வோடு சுழலா நிற்க.

(வி - ம்.) தெரித்திலேம் - தெரிந்திலே மென்பது வலிந்துநின்றது. மறித்து - மடங்கி. வரித்து வைத்தனைய - நியமித்துவைத்தா லொத்த.

(30)

 அடர்ப்ப வண்மிடின ருந்துதியெ டுத்து நவின்மின்
 சுடர்ப்ப தங்களில்வி ழுந்துதுணை சேர்ந்து நிமிர்மின்
 விடுக்கு மென்றுவிரி நாவொடுக ரத்தி ரளினை
 மடுத்த காதலினி யக்கியெரி வல்வி ரைவுற.

(இ - ள்.) அக்கினி யென்பவன் கொல்ல நெருங்கிவரின் அருமையான தோத்திரங்களைச் சொல்மின். ஒளிபொருந்திய பாதங்களின் விழுந்து வணங்கி இரண்டாகப் பொருந்தி நிமிர்ந்து அஞ்சலிசெய்து நில்லுங்கள் விடுப்பானென்று விரிந்த நாவினோடு கரங்களின் கூட்டத்தை நிறைந்த அன்பினால் இயக்குவித்து மிக விரைந்து செல்ல.

(வி - ம்.) நாவினையும் கரங்களையும் நோக்கி நீவிர் முன்பறுபட்டீ ராதலின் இஞ்ஞான்றும் வாளாவிருப்பின் நுமக்குத் தீங்கு வருதலொருதலை யென்பது தோன்ற முறையே "நவின்மின்" "நிமிர்மின்" எனக் கூறினார். தக்கன் யாகத்தில் அங்கி, கரமும் நாவும் இழந்தனன்.

(31)