பக்கம் எண் :

220தணிகைப் புராணம்

 வாழ்வு மிக்குளை யென்னில் வைகலும்
 வீழ்ம னக்குறை மெத்த வுள்ளுபு
 போழ்ம திச்சடைப் புனித னெந்தைமுன்
 தாழ்தல் செய்திடச் சார்கு வாயலை.

(இ - ள்.) எல்லாத் தேவரினும் நீ வாழ்க்கை மிக்குள்ளனையாயின் விரும்புகின்ற மனக்குறையை நிறைக்க நினைத்து நாடோறும் பிறைச் சந்திரனை யணிந்த சடையினையுடைய தூயனாகிய என் தந்தையாரின் முன்னர் வணங்கச் செல்வாயல்லை.

(வி - ம்.) வீழ் - விருப்பம். மெத்த - நிறைக்க. போழ்தல் - பிளத்தல்.

(35)

 வலன்மி குத்தியே னென்னல் வந்தவன்
 குலவு மெம்பியாற் கோட்பட் டீங்குறீஇ
 அலம ராவுள மலமந் துத்தரம்
 சிலவு நல்கிடாச் செய்கை பெற்றிலாய்.

(இ - ள்.) வலியினான் மிக்குள்ளாயெனின் நென்னற் பிறந்தவனாகிய விளங்குகின்ற என்றம்பியாற் கொள்ளப்பட் டிங்குப்பொருந்திச் சுழலுத லுறா தவுள்ளம் சுழலப்பெற்றுச் சில மறுமொழியும் கூற வியலாத செய்கையைப் பெற்றிருக்க மாட்டாய்.

(வி - ம்.) அலமரல் - சுழலல். வலன் - வலிமை. நென்னல் - நேற்று. நேற்று வந்தவன் என்றது மிகவும் இளைஞன் என்றவாறு.

(36)

 இன்ன தன்மையா லிடி லெண்குணம்
 மன்னி யெங்கணு மலர்ம ணம்மெனத்
 துன்னி யாருயிர்த் தொகுதிக் கைந்தொழில்
 முன்னி யாற்றுமம் முதல்வ னீயலை.

(இ - ள்.) இங்ஙனமாய தன்மை நின்மாட்டிருத்தலான், ஒப்பில்லாத எண் குணங்கள் பொருந்தப்பெற்று மலர்மணம்போல யாங்கணும் கலந்து அரிய உயிர்த்தொகைகட்கு ஆக்கல், அழித்தல், அருளல், காத்தல், மறைத்தலாகிய ஐந்தொழிலையும், (உயிர்களின் பக்குவ நிலைக்கேற்றவாறு) கருதிச் செய்யும் தலைவனும் நீயல்லை.

(வி - ம்.) ஈடிலா - ஒப்பிலா, முன்னி - கருதி.

(37)

 உலகு யிர்ப்பதி னுயர்ந்து ளேனெனில்
 அலகி லண்டமு மாக்கு நின்னையும்
 குலவு மாலையுங் கோணை வன்கணத்
 தலைவர் தம்மையுந் தந்த தில்லையே.

(இ - ள்.) உலகங்களைப் படைத்தலினானே யான் உயர்வு பெற்றுளே னென்பாயாயின் அளவிலா அண்டங்களையும் படைக்கின்ற வுன்னையும்,