| விளங்குகின்ற விண்டுவினையும், அழியாத வலியோடுகூடிய கணத்தலைவர்களையும் நீ படைக்கவில்லை. (வி - ம்.) கோணை - அழியாத. தந்ததில்லை - படைக்கவில்லை. (38) | | தஞ்ச மின்றியுஞ் சமைக்க வல்லையேல் | | | எஞ்சு நின்றலை யிழைத்துக் கோடிமுன் | | | துஞ்சி னாய்கொலோ தோற்ற நின்னதேல் | | | விஞ்ச வின்னினிக் காண்டும் வீறலை. |
(இ - ள்.) பற்றுக் கோடின்றியும் படைக்கவல்லமை யுடையை யானால் குறைந்த நின்றலையைப் படைத்துக் கொள். முன்னர் அதனை மறந்து விட்டனையோ? படைப்புத்தொழில் நின்னுடையதாயின் அத் தொழிலதிகரித்திருத்தலை இப்பொழுதே காண்போம். செருக்கினைக் கொள்ளற்க. (வி - ம்.) தஞ்சம் - பற்றுக்கோடு. சமைக்க - படைக்க. இழைத்தல் - படைத்தல். துஞ்சினாய் கொல் - மறந்தனையோ, வீறலை - தருக்குக் கொள்ளற்க. (39) | | சகல ரும்பலர் சத்து வக்குணம் | | | தொகுவர் நீயதிற் றோற்ற முற்றிலை | | | இகுமி ராசதத் திழித மோகுணம் | | | புகுநர் நிற்புறங் கண்டு ளாருளார். |
(இ - ள்.) மும்மலத்தோடு கூடிய சகலரும் பலர் சத்துவகுணத்தினைக் கூடியுள்ளனர். (வேதங்களை யறிந்த) நீ அச் சத்துவ குணத்தின்கட் டோற்ற முற்றா யில்லை. இராசத குணத்தினின்று மிழிந்த தமோ குணத்திற் புகுந்து நிற்கு மசுரர் முதலியோர் நின்னைப் பிறக்கிடச் செய்தாருமுளர். (வி - ம்.) கண்டுளாரு மென்றவும்மை விகாரத்தாற்றொக்கது. தமோகுணம் புகுநர் - அசுரர் முதலியோர். புறங்காணல் - பிறக்கிடச் செய்தல். இகும் : அசை. "காண்டிகுமல்லமோ கொண்க" என்றாற் போலக் கொள்க. விண்டு தமோ குணத்தினும், உருத்திரன் சத்துவ குணத்தினும், பிரமன் இராஜத குணத்தினும் தோன்றியுள்ளனரென்பது நூற்றுணிபாகலின், நீயதிற்றோற்ற முற்றிலை யென்றார் இக்குணங்களை மாற்றியும் கூறுவர். (40) | | எவற்றி னானுமிங் கென்னை யாணவத் | | | தவற்றி னைத்தெறுந் தத்து வத்தினைக் | | | கவற்றி லின்றியே கண்டு வல்வினை | | | துவற்றன் மேலெனத் துணிந்து ளாயெனில். |
(இ - ள்.) (இங்ஙனம் கூறிய உயர்வு தாழ்வாகிய) எவைகளினானு மிங்கியாது பயன்; ஒன்றுமின்று ஆகலான் ஆணவமலத்தானாகிய தவற்றினைக் கெடுக்குந் தத்துவநிலையினை வருத்துதலின்றியே அறிந்து |