| வலியோடு கூடிய வலியவினைப் பகுதியினைக் கெடுத்தலுயர்வாகுமென்று நிச்சயித்துள்ளனை யென்றால். (வி - ம்.) எவற்றினாலு மிங்கென்னை - ( உயர்வு தாழ்வாகிய ) எவைகளினாலுமொரு பயனுமின்றென்க. ஆணவத்தவற்றினை - ஆணவ மலத்தாலுளதாகிய குற்றத்தை. கவற்றத்தைல் - வருத்தல். கண்டு - அறிந்து. தத்துவம் - உண்மை. (41) | | தத்து வத்தினைந் தவவி ளக்குவ | | | உத்த மத்துயர் மறைய வற்றின்முன் | | | வைத்த சொற்பொருள் வழங்கு மாற்றநீ | | | செத்து நிற்றியேற் றெறுதற் பாலையே. |
(இ - ள்.) உண்மை நிலையினை நன்றாக விளக்குவன உத்தமகுணங் களாலுயர்ந்த வேதங்கள். அவ்வேதங்களின் முன்னர் வைத்துள்ள பிரணவமாகிய சொல்லின் பொருளைப் பிறர்க்குபதேசிக்கும் முறையை நீ யறிந்திருப்பையானால் (வலிய வினைகளை) நீக்கற்பாலை யாகுவை யென்க. (வி - ம்.) தவ - மிக. மறைமுன் வைத்த சொல் - பிரணவம். செத்து - அறிந்து. தெறுதல் - நீக்கல். ஏகாரம் மறைப்பொருளுணர்த்தி நின்றது. தெறுதற்குச் செயப்படுபொருள் மேற்செய்யுளிற் கூறிய "வல்வினை" யென்க. (42) வேறு | | இன்ன வாறெலா முயிர்த்திறக் கேட்டினை யெடுத்துப் | | | பன்னு மேல்வையும் பணிந்திரந் திலன்பரி வுழப்போர் | | | என்னும் வாலறி வெத்திறத் தூட்டினு மெய்தார் | | | கொன்னும் வாயுளான் மூகைமைக் கொள்கையே மிக்கான். |
(இ - ள்.) பிரமன் பெருமூச்சுவிட்டு வருந்தும் வண்ணம் இவ்விதமாகக் கேட்டினையெல்லா மெடுத்துச் சொல்கின்ற காலத்தும் வணங்கி இரப்புரை கூறினானில்லை. துன்பினை யனுபவிக்கும் தன்மையுடையார் தூய அறிவினை எவ்வகையானூட்டினும் சிறிது மெய்த மாட்டாராகலின் (வேதங்களை யோதிப்) பெருமையுடையவாயோடு கூடிய பிரமனும் மூங்கைத் தன்மையே மிக்குள்ளவனாயினான். (வி - ம்.) உயிர்த்து - பெருமூச்சுவிட்டு. இற - வருந்த. ஏல்வை - காலம். என்னும் - சிறிதும். இது வேற்றுப் பொருள்வைப்பணி. (43) | | செதுப்ப ழந்தலை மாலையந் திரட்கண நோக்கி | | | வெதுப்ப வெந்துய ருள்ளகம் வெச்செனப் புடைத்து | | | நொதுப்பில் வன்சிறை புகுத்துமி னொறிறப வென்றான் | | | மதுப்பொலந் தொடைக் கடம்பணி மார்பினான் றொழித்து. |
(இ - ள்.) செத்த பழந்தலை மாலையணிந்த அழகிய கூட்டமாகிய கணங்களைப் பார்த்து, வாசனையோடு கூடிய பொன்மயமாகிய மாலையை யணிந்த மார்பினையுடைய முருகக் கடவுள் கோபித்துத் துன்பமானது |