பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்223

உள்ளகத்தை வருத்த வெம்மையுண்டாக அடித்துக் கெடுதலில்லாத வலிய சிறையிற் புகுத்துங்கள் வலி கெடும்படி யென்று திருவாய்மலர்ந் தருளினான்.

(வி - ம்.) செது - சாதல். "செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தை கூர் மனத்தையாகி, என்னும் சிந்தாமணி (குண. 274) செய்யுளடியானு முரையானுமுணர்க. வெச்சென - வெம்மையுண்டாக. "அச்சமுறுத் தமுதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல், வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார்" என்னும் சிந்தாமணி (சுரமஞ்சரி. 21) செய்யுளடியானு முரையானு முணர்க. நொதுப்பு - அவிதல்; ஈண்டுக் கெடுதலையுணர்த்தி நின்றது; இதனை "நதுத்தலே நொதுத்தலோடு நவித்தலு மவித்தற் பேரே" என்னும் நிகண்டானறிக. தொழித்து - கோபித்து; "பொங்கு மாநிரை பொலியவும் பொலங்க டேர்பல முறியவும், சிங்கம் போற்றொழித் தார்த்தவர் சிறுவர் தேர்மிசைத் தோன்றினான்" என்னும் சிந்தாமணி (மண்மக. 205) செய்யுளானு மதனுரையானு முணர்க.

(44)

 குருதி கொப்பளித் தருவியாய்க் குவவுத்தோட் குதிப்பப்
 பொருவில் பன்மணி மோலியிற் பொடிபட்டுப் பொழியத்
 திருவு மற்றவன் றேசுநற் சிருட்டியுஞ் சிந்த
 உருவ வன்கணம் விரன்மடித் தோச்சின சிரத்தில்.

(இ - ள்.) இரத்தமான தருவிபோற் கொப்பளித்துத் திரண்ட தோளின்மேற் பாய முடியின்கண்ணுள்ள ஒப்பில்லாத பல இரத்தினங்கள் தூளாகிச் சிந்த அப்பிரமன் செல்வமும், அழகும், படைத்தற்றொழிலும் கெடும்வண்ணம் கண்டா ருட்குவரத்தக்க வலியகணங்கள் விரலினை மடக்கித் தலையின்கண் குட்டின.

(வி - ம்.) உரு - உட்குதல். "உருவுட்காகும்" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. அகரஞ் சாரியை.

(45)

 எருக்கி வன்கரம் பிறையெனப் பிடர்கொடுத் தெற்றி
 மருக்கி ளர்ந்ததார் மணிவடம் வழித்தலைச் சிந்தத்
 தருக்க ழிந்துநீர்த் தாரையில் விழிச்சுடர் சாம்பப்
 பொருக்கெ னக்கொடு போந்தருஞ் சிறைப்புகு வித்த.

(இ - ள்.) அடித்துக் கையின்கண்ணுள்ள விரலினைப் பிறைச்சந்திரனென்று சொல்லும் வண்ணம் வளைத்துப் பிடரின்கட் கொடுத்துத் தள்ளி வாசனையை வெளியிடுகின்ற மாலையும், அக்கமாலையு மறுந்து வழியிடங்களிற் சிந்தச் செருக்கு நீங்கி நீரொழுக்கினால் கண் ஒளி மழுங்கக் கொண்டு சென்று கணங்கள் ஒருவராலும் நீக்குதற்கரிய சிறையின் கட் புகுவித்தன.

(வி - ம்.) எருக்கி - அடித்து. மணிவடம் - உருத்திராக்க மாலை. தாரை - நீரொழுக்கு. சாம்பல் - கூம்புதல்; ஈண்டு மழுங்கல். பொருக்கென : விரைவுக்
குறிப்பு.