| | விளைவ தோர்கிலா விரிஞ்சன்வே றொருதுணை யின்றி | | | அளைய ருஞ்சிறைப் பெருந்துயர்த் துணையொடு மாழ்ந்தான். |
(இ - ள்.) வருந்தும்படி அயலார் அடித்தகாலத்து அஞ்சற்க எனப் பாதுகாக்கும் ஆதாரமாகிய தந்தைதாயரா னீக்கப்பட்ட குழவியைப் போலப் பின்னர்த் தனக்கு வருவதாகிய துன்பினை ஆராயாதவனாகிய பிரமன் வேறொரு துணையுமில்லாமல் கலத்தற்கருமையாகிய சிறையின் கண்ணுளவாகிய பெரிய துன்பமாகிய துணையோடு மகிழ்ந்தனன். (வி - ம்.) உளைய - வருந்த. களைகண் - ஆதாரம். விரிஞ்சன் - அன்னப் பறவையாற் றாங்கப்பெறுபவன். அளையருஞ்சிறை - கலத்தற் கருமையாகிய சிறையிடம். (47) | | பாம்பின் வாய்ப்பல நாட்படு பரிதியு மறிவங் | | | கோம்பு முள்ளமோ டுலைப்பினாட் கருப்படு மழவும் | | | கூம்பு றாதுபன் னாள்விரி கங்குலின் விழியும் | | | தேம்ப ருஞ்சிறைத் திசைமுகத் தவனிக ரானான். |
(இ - ள்.) வருத்தத்தைத் தருகின்ற அரிய சிறையின் கண்ணுள்ள பிரமன் கேதுவென்னும் பாம்பின் வாயின்கண்ணே பலநாட் பொருந்திய சூரியனையும், நல்லறிவைப் பாதுகாக்கு முள்ளத்தோடே அளவில்லாத காலம் கருக்குழியிற் பொருந்தும் குழவியையும், இதழ்குவியாமல் பல காலம் இரவின்கண் விழித்திருக்கின்ற விழியினையும் ஒப்பாயினன். (வி - ம்.) பாம்பு - ஈண்டுக் கேது. கருவின்கட் குழவியடங்கி யிருக்கும்போது பிறவித்துன்ப முதலியன தோன்றலின் ஆண்டிருந்தே இறைவனை நோக்கி யினிக்கருவாசம் ஒண்ணாதெனக் கைகூப்பி வருந்து மாகலின் "அறிவங் கோம்பு முள்ளமோ டுலைப்பினாட் கருப்படு மழவும்" என்றார். ஓம்பும் - பாதுகாக்கும். உலப்பில் - அளவில்லாத; கரு - கருப்பம். கூம்புறாது - குவியாது; ஈண்டுத் துயிலின்மை யென்க. விரி - ஈண்டு விழித்தல். தேம்பு - வருந்துகின்ற திசைமுகத்தவ னிவைகளை யொத்தானென முடிக்க. (48) | | கணவ னார்சிறைப் படுவது கருதினாள் கொல்லோ | | | தணவு றாதவ னாவகந் தவிர்ந்தவொப் பனையாள் | | | இணர்கு லாந்தருத் தாமரை யிசையிவை மற்றும் | | | அணவி வாழ்தரு மகமென முன்னரே யமைத்தாள். |
(இ - ள்.) அப்பிரமன் நாவாகிய விடத்தை இறைப்பொழுதும் நீங்காமற் றங்கிய அலங்காரமுடைய கலைமகள், பூங்கொத்துக்கள் பொருந்திய மரமும், தாமரை மலரும், கீதமுமாகிய இவை முதலிய பிறவற்றையும் பொருந்தி வாழ்தற் கேதுவாகிய இல்லமென முன்னரே அமைத்துக் கொண்டனள். ஆதலாற் றன்னாயகர் சிறையின்கட் படலை முன்னரே யறிந்து வைத்தாள்போலும். (வி - ம்.) தவிர்ந்த - தங்கிய. ஒப்பனையாள் - அலங்காரத்தை யுடையாள். தரு - மரம். இசை - கீதம். அகம் - இல்லம். இக்கதையைக் காஞ்சிப்புராணம் நான்முகப் படலத்தால் அறிக. (49) |