| | விரகு மேவரி னரகமுந் துறக்கமே வெதிர்க்கும் | | | நரக மேவிர கில்லுழி நயத்தகு மிடமும் | | | அரவ மாலையன் கயிலையு மலரவன் றனக்குப் | | | புரவி லாத்துயர்க் கவதியில் புவனமா கியதே. |
(இ - ள்.) நுண்ணறிவு பொருந்தினால் நரகானுபவமும் துறக்கா னுபவமாகும். நுண்ணறிவில்லுழி (யாவரும் விரும்பத்தக்க போகபூமி முதலிய இடங்களும்) செவிடு படுதற்குக் காரணமாகிய நரகானுபவமேயாகும். ஆதலால் தாமரையலரின்கண் வாழ்கின்ற பிரமனுக்குப் பாம்பலங்காரப் பரமன் வாழ்கின்ற கயிலைமலையும் காத்தலில்லாத துன்பினுக்கு முடிவில்லாத நரகபூமி யாகியது. (வி - ம்.) நுண்ணுணர்வின்மை வறுமை யஃதுடைமை "பண்ணைப் பணைத்த பெருஞ்செல்வ" மென்னும் நாலடிச் செய்யுளின் கருத்து முன்னிரண்டடியினுமமைந்திருத்தல் காண்க. விரகு - அறிவு. வெதிர்க்கும் நரகம் - செவிடுபடுதற் கேதுவாகிய நரகம். துயர்க்கு அவதியில் புவனம் - நரகம்; அலரவன் - ஈண்டுக்குறிப்புமொழி; பழிச்சொல் உடையவனெனப் பொருள்படுதலான். நிலங்கடந்தான் தா "அயதெல்லா மொருங்கு" (610) என்னும் பொய்யா மொழிபோல் வாளா பெயராய் நின்றது. (50) | | தேவ ராயினா ரின்பமே நரகினிற் றிளைக்கும் | | | பாவ ராயினார் துன்பமே படரிரு பயனும் | | | பூவ ராயின ரேநுகர் வாரெனப் புகல்வார் | | | காவ னான்முக னிடும்பைநோய் கண்டிலார் போலும். |
(இ - ள்.) தேவ ராயினர் இன்பத்தினையே நுகர்வார். நரகினில் மூழ்கும் பாவமுடையார் துன்பத்தினையே நுகர்வார். பொருந்திய இவ் விருபயனையும் பூமியிலுள்ளாரே அனுபவிப்பாரென்று கூறுவோர்கள் சிறைக்காவலிலுள்ள பிரமன் அனுபவிக்கும் துன்பமாகிய நோயினைக் கண்டிலார் போலும். (வி - ம்.) பூவர் - பூமியிலுள்ளவர். காவல் - ஈண்டுச் சிறைக்காவல், "நுகர்வாரென்பதனை யேனைய இடத்தும் கூட்டுக" (51) | | மூவ ரென்றுட னெண்ணிடு முதன்மையு முனிவர் | | | தேவர் யாவரும் பணிபுரிந் துயர்தரு திருவும் | | | நாவி யங்குழன் மாதரார் கலவியி னயப்பும் | | | ஆவ விற்றவா றெனவிலா வித்துள மயர்வான். |
(இ - ள்.) மூவரென் றுடன்வைத் தெண்ணத்தக்க முதன்மையும், முனிவர்களும், தேவர்கள் யாவரும், பணிசெய்தலாலுயர்கின்ற செல்வமும், கத்தூரிக்குழம்பினை யளைந்த கூந்தலோடுகூடிய பெண்களின் கலவியான் வருகின்ற இன்பமும், ஐயோ கெட்டவிதமென்ன என்று அழுது மனம் வருந்துவான். (வி - ம்.) ஆவ - ஐயோ இரக்கக்குறிப்பு. விலாவித்து - அழுது. (52) |