பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்229

தூய்மையையுடைய மூலகாரணனாகிய முருகப்பெருமான் புவனங்களைப் படைக்கக் கருதிச் சிறப்புப் பொருந்திய வேங்கடமலையினை யடைந்தனன்.

(வி - ம்.) அவதி - முடிவு. புகர் - ஈண்டு ஆணவமலம். அணங்கிய - பொருந்திய.

(61)

வேறு

 குளிர்மரம் பொந்தாகக் கோட்டுமண் கொளும்வேழம்
 தெளிபளிக் கறைநாப்பட் டிகழ்தன துருநோக்கிக்
 களிறென வெதிர்பாய்ந்து கதிர்மருப் பிடையிறலும்
 ஒளிர்மணி யிளமதியி னொழுகமிழ் தெனவுகுமால்.

(இ - ள்.) குளிர்ந்த மரங்கள் துளையாம் வண்ணம் குத்திப் பெயர்த்த யானைகள் தெளிந்த பளிங்குப்பாறையின் நடுவண் விளங்குகின்ற தனதுருவினை வேறொரு யானையெனக் கருதி எதிரே பாய்தலான் ஒளியோடு கூடிய கொம்பிடையே யொடிய (அக்கொம்பின்கணுள்ள) ஒளியையுடைய முத்தங்கள் பிறைச்சந்திரனிடத்தினின்றும் ஒழுகுகின்ற அமிழ்தமென்று சொல்லும் வண்ணம் சிந்தும்.

(வி - ம்.) கோட்டுமண் கொளல் - குத்திப்பெயர்த்தல். இதனை, "தோட்டுவண் டொலியன் மாலைத் துடியிடை மகளி ராய்ந்த, மோட்டு வெண் முத்த மின்னு முகிழ்முலை யுழுத சாந்தம், கோட்டுமண் கொண்ட மார்பம் கோதைவாள் குளித்து மூழ்கிக், கொள்ள நின்றான். குரிசின்மண் கொள்ள நின்றான்" என்னும் சிந்தாமணி - (மண் மக - 193) செய்யுளானு மதனுரையானும், "வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல் ஏரியவாயினு மென்செய்யும் - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந்தணியகலம் - கோட்டுமண் கொள்ளாமுலை" என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுளானும் "கூட்டுமைபோற் செறிந்த கூரிருளைக் கூன்கோட்டாற், கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள்" என்னும் நளவெண்பாச் செய்யுளானுமறிக. அறை - பாறை. தனதுருவைக் களிறென நோக்கி என மாற்றுக. இறல் - கெடுதல்.

(62)

 குரங்கிய மலர்ச்சாகைக் கோடம லதிங்கத்திண்
 மரங்கொலு மதவேழ மதர்த்தெ" மயக்கத்தால்
 உரங்கிள ரரசென்னா துடன்மடங் கலின்மார்பம்
 அரங்கொலுங் கூர்ங்கோட்டி னழுத்துபு நிமிர்ந்தோச்சும்.

(இ - ள்.) வளைந்த மலர்களையுடைய சிறு கிளைகளோடு கூடிய கொம்புகள் நிறையப்பெற்ற திண்ணிய அதிமதுர மரத்தை யொடிக்கின்ற மதத்தையுடைய யானைகள் (அவ்வதிமதுர இலையாகிய குளகினை யுண்ணலால்) மதர்த்துண்டாகிய மயக்கங் காரணமாக வலிமை விளங்குகின்ற விலங் கரசனென்று கருதாது அப்பொழுதே சிங்கத்தின் மார்பத்தினிடத்துக் கொல்லன் அரத்தின் வலியையும் கெடுக்கின்ற வலி பொருந்திய கூர்மையோடுகூடிய கொம்பினாற் குத்தி நிமிர்ந்து வீசும்.