| (வி - ம்.) குரங்குதல் - வளைதல். இதனை "இலைப்பொழில் குரங்கினவீன்ற தூண்டளிர்" என்னும் சிந்தாமணி (காந்த. 164) செய்யுளடியானுணர்க. அதிங்கம் - அதிமதுரம். இதனை "நாறுமும் மதத்தினாலே நாகத்தை யிரிக்கும் நாக, மாறிய சினத்ததன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால்" எனவரும் சிந்தாமணி (காந்த. 258) செய்யுளடியானு மதனுரையானு முணர்க. அதிமதுரத் தழையாகிய குளகினை யானை யுட்கொள்ளுமாயின் மதத்தையக்குளகு மிகச் செய்யுமென்பதனை மேற்கூறிய செய்யுளடிகளானு முரையானு முணர்க. அதிமதுரக் குளகினையுண்ட மயக்கங் காரணமாக யானை விலங் கரசனாகிய சிங்கத்தினைக் கோட்டாற் குத்தி வீசியதென்பார். "மயக்கத்தாற் கோட்டி னழுத்துபு நிமிர்ந்தோச்சு" மென்றார். அழுத்தல் - ஈண்டுக்குத்தல். ஓச்சல் - வீசல். | | தோற்றுதி வள்ளுகிரு மவைதுறு மியதாளும் | | | கூற்றெனக் கொளல்வாய்த்துக் கொம்மென வெழுவேங்கை | | | ஏற்றுவன் னுதிக்கோட்டி னிமில்விடைக் குலைப்பநினைப் | | | பாற்றுத லில்லையெனப் படர்தெரிப் பனபோலும். |
(இ - ள்.) தோல்வாயிற் பொருந்திய கூரிய நகங்களையும் அந்நகங்கள் பொருந்திய கால்களையும் இயமனென்று சொல்லும் வண்ணம் கொள்ளுதல் வாய்க்கப்பெற்று விரைவாகப் பகைமே லெழுகின்ற வேங்கைப் புலியினை இமிலையுடைய எருதுகளானவை வலியகூர்மை பொருந்திய கொம்பினாற் குத்தித்தூக்கி யசையாநிற்ப அசைதல் அப்புலியான தினியுன்னையு முன்குலத்தையும் வருத்தேனென்று சொல்லும் வண்ணம் (அவ்விடைகள் அதற்குத்) துயர்செய்தலைத் தெரிவிப்பன போலும். (வி - ம்.) தோல்துதி - தோல்வாய். துதி - வாய்; இனிக் கூர்மை யென்பாருமுளர். கொம்மென - விரைவுக் குறிப்பு. வேங்கை யிரண்டாவதன்றொகை. இமில் - விடையின் முரிப்பு; இதனையிக் காலத்துக் கொண்டை யென்பர். விடை கோட்டினி லேற்றுக் குலைப்பவென மாற்றுக. பாற்றுதல் - வருத்துதல். படர் - துன்பம். (64) | | குடநிகர் செருத்தற்றிண் கோட்டிள வனமேதி | | | இடவிய வறைநின்று கன்றினை யினிதூட்டிப் | | | படர்தர வுகுதீம்பால் பசையறத் துவர்ந்ததனைக் | | | கடறமர் வாழ்க்கையினார் கணிச்சியின் வௌவுவரால். |
(இ - ள்.) குடத்தையொத்த மடியினையும், திண்ணிய கொம்பினையும் இளைமையையுமுடைய காட்டெருமைகள் இடமகன்ற பாறையின் கணின்று தங்கன்றுகளை இனிதாக உண்பித்துச் செல்லச் சிந்தின பசையில்லாமற் காய்ந்த பாலினைக் காட்டில் வாழ்கின்ற வேடர்கள் கோடரியால் வெட்டிக் கைக்கொள்வார். (வி - ம்.) செருத்தல் - மடி. இடவிய - இடமகன்ற. கணிச்சி - மழுப்படை. கடறு - காடு. (65) | | மானின முடல்சிந்த வால்வெடித் தெழுசிங்கம் | | | ஊனிவர் கும்பத்தி னூறுசெய் நெய்த்தோரும் |
|