வற்றைச் சேர்த்தல் ஆய்ச்சியர் தொழிலாதலின் அத்தொழில் நதியினிடத்தும் உளவாதலைக் கண்டுகொள்க. பாடி ஆய்ச்சியரைக் குறிக்கும்போது ஏனைய நகரமெனவும் நதியைக் குறிக்கும்போது ஆயர்பாடி யெனவும், உற்றவைமாற்றி - மாதரைக் குறிக்கும்போது உற்றனவாகிய பொருள்களுக்கு விற்று எனவும் நதியைக் குறிக்கும்போது எதிருற்ற பொருள்களை நீக்கியெனவும் பொருள்கொள்க. முளி - கட்டி; இதனை "முளிதயிர் பிசைந்தகாந்தண் மெல்விரல்" (செய்யுள் - 167) என்னும் குறுந்தொகைச் செய்யுளானறிக. உராய் - பெயர்ந்து, குளவி - காட்டுமல்லிகை; மலைப்பச்சை யென்பாருமுளர்; தொழின்மை - தொழிலுடைமை; இதனை "மூவினை மையின்" என்னுஞ் சிவஞானபோத வுரையா னுணர்க. (22) | திணிகவைக் கோடும் வேயுந் திரிபுரி நாருந் தாங்கி | | மணிநிரை யோம்பி நேரும் வல்விடை தழுவித் தோய்ந்த | | வணிநிறை மகளிர் கூந்த லலங்கலங் கொன்றை சூட்டிப் | | பிணிதபு மாயர் செய்கை பேணியும் பெயர்வ தாங்கண். |
(இ - ள்.) அம் முல்லைநிலத்தில் வெள்ளமானது திண்ணிய (முள் முதலியவற்றை யெடுக்குங் கருவியாகிய) இருபிளவுள்ள கொம்பையும் மூங்கின் மரங்களையும் சாறடைக் கொடிகளையுந் தாங்கிச் சேறலானும், மணியின் நிரைகளைப் பாதுகாத்தலானும் எதிர்ப்பட்ட வலிய ஏறுகளைத் தழுவுதலானும், தன்னுள் மூழ்கிய அழகிய கற்பினையுடைய ஆய்ச்சியரது கூந்தலின்கண் அழகிய கொன்றைமலரைச் சூட்டுதலாலும் நோய் நீங்கிய ஆயர் செய்கையைப் பொருந்தியுஞ் செல்வது. (வி - ம்.) கவைக்கொம்பும் புல்லாங்குழலும் கன்றணை கயிறுந் தாங்கி ஆனிரை யோம்பிக் கொல்லேறு தழுவி மாலையணிந்து மகளிரைக் கூடுதல் ஆயர் செய்கையாதலின் அச்செய்கை நதியுமுடைத்தாதல் காண்க. வேய் நதியைக் குறிக்கும்போது மூங்கிலெனவும் ஆயரைக் குறிக்கும்போது புல்லாங்குழலெனவும், திரிபுரிநார் - நதியைக் குறிக்கும் போது சாறடைக் கொடியெனவும் ஆயரைக் குறிக்கும்போது திரித்த கன்றணை கயிறெனவும், மணிநிரை நதியைக் குறிக்கும்போது இரத்தினக் கூட்டமெனவும் ஆயரைக் குறிக்கும்போது மணிகட்டிய ஆனிரை யெனவும், விடைதழுவல் நதியைக் குறிக்கும்போது தன்னுட்பொருந்திய இடபங்களைச் சூழ்ந்தெனவும், ஆயரைக் குறிக்கும்போது மணத்தின்பொருட்டுக் கொல்லேறு தழுவியெனவும், தோய்ந்த நதியைக் குறிக்கும்போது தன்னுள் மூழ்கியவெனவும் ஆயரைக் குறிக்கும்போது சேர்ந்தவெனவும் பொருள்கொள்க. தபும் - நீங்கிய. (23) | பூத்தசெந் தாமரைக்கண் மெய்யெலாம் பொலியத் தோற்றித் | | தூத்தகை வயிரம் பற்றித் துலங்குவா ரணமேற் கொண்டு | | காத்தலை மருவி நீண்ட கற்சிறை பலவுஞ் சிந்தி | | யேத்துவிண் ணரச னென்ன விறுத்தது பழனப் பாங்கர். |
(இ - ள்.) அவ்வெள்ளமானது மருதநிலத்தின்கண் மலர்ந்த செந்தாமரை மலர்த்தேன் வடிவமெங்குஞ் செறியத் தோற்றுதலாலும், பரி |