பக்கம் எண் :

24தணிகைப் புராணம்

சுத்தம் பொருந்திய அழகோடுகூடிய வயிரமணிகளை (அலையாகிய கரங்களால்) பற்றுதலானும், விளங்குகின்ற சங்கினங்களைத் தன்மேற் கோடலானும், பூஞ்சோலைகளினிடத்துப் பொருந்துதலானும், நீண்ட கல்லணை பலவற்றையும் (அகழ்ந்து) சிதறுதலானும் அந்நிலத்திற் கதிதேவதையாகத் துதிக்கப்படுகின்ற இந்திரனென்று சொல்லும்படி தங்கியது.

(வி - ம்.) செந்தாமரை மலர்போன்ற கண்கள் மெய்யிற் பொலிய வச்சிரப்படையைக் கரத்திற்றாங்கிய யானையின் மீதேறிக் கற்பகக்காவிலிருந்து மலைகளினிறகறுத்தல் இந்திரனுக்குரிய செயலாகலின் அச்செயல் நதியின் மாட்டும் அமைந்திருத்தல் காண்க. செந்தாமரைக்கண் மெய்யெலாம் பொலிய - நதியை நோக்கத் தேனெனவும் இந்திரனை நோக்கக் கண்ணெனவும், வயிரம் நதியை நோக்க வயிரக்கல்லெனவும் இந்திரனை நோக்க வச்சிராயுதமெனவும், வாரண மேற்கொண்டு நதியை நோக்க சங்கினங்களைத் தன்மேற் கொண்டெனவும், இந்திரனை நோக்க வெள்ளை யானையின் மேலிருத்தலைக் கொண்டெனவும், காத்தலை மருவி நதியை நோக்கச் சோலைகடோறும் பொருந்தியெனவும் இந்திரனை நோக்கக் கற்பகச்சோலையின்கட் பொருந்தியெனவும், கற்சிறை நதியை நோக்கக் கல்லணையெனவும் இந்திரனை நோக்க மலையின் சிறகெனவும் பொருள் கொள்க. ஏத்து விண்ணரசு - செயப்படுபொருள் செய்பொருள் போலக் கூறப்பட்டது.

(24)

 மருதமர் கிள்ளை யஞ்ச வயின்வயி னியம்பிச் சென்று
 முருகமர் வயலிற் பூத்த முண்டகங் குமுதங் கட்டுக்
 குருமணிக் காஞ்சிச் சூழற் கொழுநனை மலரப் புல்லித்
 திருவியல் கடைசி மார்தஞ் செய்கையுந் தழீஇய தாங்கண்.

(இ - ள்.) மருதநிலத்தின்கண் அவ்வெள்ளமானது மருத மரத்தின் கட்டங்கிய கிளிகள் அச்சமடைய இடந்தொறு மொலித்துச் செல்லுதலானும், வாசனைதங்கிய வயலினிடத்துப் பூத்த தாமரை மலர்களையும் அல்லி மலர்களையுங் களைந்தெறிதலானும், நிறத்தோடுகூடிய அழகிய காஞ்சி மரச்சோலையினிடத்துள்ள செழித்த அரும்புகள் மலரும்படி தழுவுதலானும் அழகமைந்த மள்ளப்பெண்களினது செய்கையையும் பொருந்தியது.

கிளிகள் நாணவார்த்தையாடி வயலிற் பூத்த தாமரையுங் குமுதமுமாகிய களை களைக் களைந்தெறிந்து காஞ்சி நிழற்கண் தங்கணாயகராகிய மள்ளர்கள் மகிழும்படி புல்லுதல் கடைசி மாதர் செய்கை ஆதலின் இச்செய்கை நதியின் மாட்டும் அமைந்திருத்தல் காண்க. இயம்பி - என்பதற்கு நதியைக் குறிக்கும்போது ஒலித்தெனவும் பெண்களைக் குறிக்கும் போது உரையாடியெனவும், கட்டென்பதற்கு நதியைக் குறிக்கும் போது பிடுங்கி யெறிந்தனவும், கடைசி மாதரைக் குறிக்கும்போது களைபறித்தெனவும், கொழுநனை யென்பதற்குச் சோலையைக் குறிக்கும் பொழுது செழித்த அரும்பெனவும் கடைசி மாதரைக் குறிக்கும் பொழுது நாயகரெனவும், புல்லியென்பதற்கு நதியைக் குறிக்கும் பொழுது பொருந்தியெனவும் கடைசி மாதரைக் குறிக்கும்பொழுது தழுவியெனவும் பொருள் கொள்க. முருகு - வாசனை; முண்டகம் -