பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்233

பூரமு மோருநா வியுங்கலந் தோசனை கமழுமே" என்னும் சிந்தாமணி (விமலை 13) செய்யுளானு மதனுரையானு முணர்க.

ஆலிய - அசைகின்ற. தகையனவகையன - தகுதியுடையனவாகிய வகையை யுடையன வென்க.

(70)

 கீற்றுவெண் மதிக்கோடு கெழுமலிற் றொடைகீறித்
 தேற்றுளி யுகுவதனைத் தீம்புனற் சுனைக்கெண்டை
 ஏற்றுண வாயணரி யிருப்பன மறைமொழிவாய்
 தோற்றினர் புனலழுந்துந் தூத்தவர் நிலைகாட்டும்.

(இ - ள்.) பிளவுபட்ட வெள்ளிய பிறைச்சந்திரனது கொம்பு பொருந்துதலினால் தேன்கூடு சிதைந்து தேத்துளி சிந்துவதனை இனிய நீரோடுகூடிய சுனையின்கண்ணுள்ள கெண்டைமீன்கள் ஏற்றுண்ணுதற்கு வாயை மேனோக்கியிருப்பன மந்திரங்களைச் சொல்கின்ற வாயினை மேலே தோன்றச்செய்து நீரின்கண்ணே மூழ்கும் தூய்மையான தவத்தை யுடையாரது நிலையினைக் காட்டாநிற்கும்.

(வி - ம்.) கீற்று - பிளந்த, கெழுமல் - பொருந்தல். தொடை - தேன்கூடு. வாயணரி - வாயைப் பிளந்து.

(71)

 சிலையென நனிவாங்கிச் செற்றிய நென்மிசையாக்
 கொலைபுரி மதவேழங் கொம்மென விடுவேழம்
 அலைபுரி தூண்டிலென வையென நிமிர்ந்தோங்கி
 நிலைபுரி வாளியெனச் செந்நிலை நின்றிடுமே.

(இ - ள்.) கொலைத்தொழிலைச் செய்கின்ற மதமயக்கத்தையுடைய யானைகள் விற்போல மிகவளைத்து அதன்கட் பொருந்திய நெல்லினை யுண்டு விரைவாக விடப்பட்ட மூங்கின்மரங்கள் மீனினத்தினுக்குத் துன்பினைச் செய்கின்ற தூண்டிலைப்போல விரைவாக நிமிர்ந்துயர்ந்து நடுதலைச்செய்த அம்புபோல நேராக நின்றிடும்.

(வி - ம்.) இச்செய்யுளின் கருத்து, "யானே யீண்டையேனே யென்னலனே, யேனல் காவலர் கவணொலி வெரீஇக் - கானயானை கைவிடு பசுங்கழை, மீனெறி தூண்டிலி னிவக்கும் - கானக நாடனோ டாண்டொழிந் தன்றே" (54) என்னும் குறுந்தொகைச் செய்யுளிளமைந்திருத்தல் காண்க. என என்பன மூன்று முவமைகுறித்து நின்றன. நெல் - தோரை. அலைபுரி - வருத்தலைச் செய்கின்ற. ஐயென : விரைவுக் குறிப்பு. இனி "ஐவியப்பாகு" மென்னுஞ் சூத்திரம்பற்றி வியப்பென்பாரு முளர்.

(72)

 அடிவரைத் தடமார்ப மருவிக ளகழ்ந்தாங்குச்
 சுடர்விடு வயிரங்கள் சுழித்தெழுந் திருபாலும்
 வடிபெருங் குலையென்ன வார்த்திசை யெழுப்பிப்போய்
 இடவிய பணைமருதத் திளம்பயிர் வளர்ப்பனவே.

(இ - ள்.) மலையடியின் நடுவிடத்தை யம்மலையினின்று மொழுகும் அருவிகள் தோண்டி யம்மலையடியிலுள்ள ஒளிவீசுகின்ற வயிரமணிகளைச்