| | குவட்டுமத் தகத்தோட்டி குளிர்பிறை கொளவாங்கண் | | | உவட்டெடுத் தொழுகருவி யொழுகுகை யறைபுளகம் | | | கவட்டணி கொடிநிரைநீள் கதலிநெட் டிலைசெவிபோர் | | | சவட்டர சிபமென்னத் தகுவதத் திருமலையே. |
(இ - ள்.) அத் திருவேங்கடமலை சிகரமாகிய மத்தகத்தினிடத்துள்ள தோட்டியாகக் குளிர்ந்த பிறையையும், அம்மலையின்கட் பெருக்கெடுத் தொழுகுகின்ற அருவியை நீண்ட கையாகவும், பாறைகளை (யானையின் பருமத்திற்றைத்த) கண்ணாடியாகவும் (யானையின்) கழுத்திடு கயிற்று வரிசைகள் கொடிநிரையாகவும், (யானைச்) செவிகள் நீண்ட வாழையினிலையாகவும் கொள்ளுதலான் போர்க்களத்தின் கண்ணே பகைவரை யழிக்கின்ற அரசு வாவென்று சொல்லும் தகுதிவாய்ந்தது. (வி - ம்.) பிறையைத் தோட்டியாகவும், அருவியைக் கையாகவும், பாறைகளைக் கண்ணாடியாகவும், கழுத்திடு கயிற்றைக் கொடிநிரையாகவும் கொள்ளலால் வரையியமெனத் தகுவதென்க. ஒழுகல் - நீளல். இதனை "வார்தல் போதல் ஒழுகல் மூன்றும் - நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. அறை - பாறை. புளகம் - கண்ணாடி; யானைப்பருமத்தில் கண்ணாடி தைத்திருத்தலை "பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டம்" என்னும் சிந்தாமணி (காந்தரு - 317) செய்யுளடியானு முரையானு முணர்க. சவட்டல் - அழித்தல். இதனை "தன்னையும் சவட்டிப் போகிச் சாமியைச் சார்து மென்றான்" என்னும் சிந்தாமணி (கனக - 178) செய்யுளடியானு முணர்க. இஃதுருவகவணி. (76) வேறு | | இத்தகு வளஞ்சால் வெற்பை யெய்திய குமரப் புத்தேள் | | | எத்தகு தொழிற்குந் தானே யிறையெனுந் தன்மை தேறிப் | | | பித்துறு முலக முய்யப் பெருகிய கருணை யோடும் | | | உத்தமச் சூழ னாடி யொளிர்மணிக் கோயில் கொண்டான். |
(இ - ள்.) இத் தன்மையான வளமிகுந்த மலையினையடைந்த குமரக்கடவுள் (படைத்தல் காத்தல் முதலிய) எவ்வகைத் தொழிலினுக்கும் தானே தலைவனென்னும் தன்மையைத் தெளிந்து (மூல ஆணவ மயக்கலின் முதல்வனைப் பின்னிட்டு முனைத்தெழுகின்ற, பித்தினையெய்திய உயிர்களுய்யும் வண்ணம் (மேன்மேலு முவட்டெடுத்துப்) பெருகுகின்ற கருணையால் உத்தமமாகிய இடத்தினை யாராய்ந்து ஒளிர்மணிக் கோயிலின்கண் வீற்றிருந்தான். (வி - ம்.) உலகம் : ஆகுபெயர். ஓடு : உருபுமயக்கம். நாடி - ஆராய்ந்து தேறியுய்ய என முடிக்க. (77) | | கதிர்மணிக் குலங்கால் யாத்துக் கண்கவர் வனப்பு வாய்ந்த | | | பிதிரொளித் தவிசி னுச்சிப் பெருந்தவ முனிவர் தேவர் | | | அதிர்கழல் வேந்தன் மாயோ னடற்கணம் வீரர் போற்ற | | | முதிரொளி யெறிப்ப வைகி முதற்றொழி றொடங்கி னானே. |
|