| (இ - ள்.) ஒளிபொருந்திய மணிக்கூட்டங்களைப் பதித்துக் கண்டார் கண்ணை யிழுத்துக்கொள்ளுதற் கேதுவாகிய அழகுபொருந்திய ஒளியை வெளிவிடுகின்ற ஆசனத்தின் மத்தியிற் (செயற்கரிய) பெரிய தவத்தினையுடைய முனிவர்கள், தேவர்கள், முழங்குகின்ற வீரக் கழலினையணிந்த இந்திரன், மாயன், வலிமை பொருந்திய வீரவாகு முதலிய வீரர்களும் போற்றாநிற்ப மிக்க ஒளிவீசத் தங்கிப் படைப்பாகிய தொழிலினைத் தொடங்கினான். (வி - ம்.) கால்யாத்தல் - கட்டல். வேந்தன் - இந்திரன், இதனை "வேந்தன்மேய தீம்புனலுலகமும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. வீரர் - வீரபாகு முதலிய நவவீரர்கள். முதற்றொழில் - படைத்தற்றொழில். உம்மை இறந்ததுதழீஇயது. (78) | | ஆக்கிய படைப்புக் கேற்ப வளித்திட வல்லா னென்று | | | பூக்கமழ் துளவத் தாரான் புரத்தலுந் தந்தை செல்வம் | | | பாக்கிய மனைய மைந்தர் பாலதாய் முடியு மாற்றால் | | | தாக்குருத் திரனார் செய்யுந் தனித்தொழி லோடுஞ் செய்தான். |
(இ - ள்.) உண்டாக்கிய படைத்தற் றொழிலினுக்கியையக் காத்தற் றொழிலினும் வல்லமை யுடையா னென்றுலகம் கருதும்வண்ணம் பூக்கள் மணம் வீசுகின்ற துளசிமாலையை யணிந்த விண்டுவின் றொழிலாகிய காத்தலையும், தந்தையர்க்குரிமையாகிய செல்வம் பாக்கியத்தை யொத்த மைந்தர் பகுதியாய் முடியுந்தன்மை யுளதாதலினானே எல்லா வுலகங்களையுமழிக்கு முருத்திரர் செய்யும் ஒப்பற்ற அழித்தற் றொழிலுடனே செய்தான்.(வி - ம்.) பாக்கியம் - புண்ணியம், இதனை "பலர்காணார் பாக்கியத்தால்" என்னும் திருக்குறளானறிக; "பாக்கியம் புரிந்திலாப் பரத" னென்றார் கம்பநாடரும். என்றென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. (79) | | இந்திரற் கரசு மன்றே யிற்றதா லிவ்வா றெங்கோன் | | | முந்திய படைப்புக் காப்பு முருக்கலோ டுஞற்றி நீதி | | | தந்துயிர் மறைப்பி னீக்கித் தனியரு ளுறுத்தா நிற்ப | | | வந்துவந் தொழிந்த தேவர் வருடங்கள் பலவு மாதோ. |
(இ - ள்.) இந்திரனுக்கு அரசாட்சியும் அக்காலத்தே யழிந்தது. இங்ஙனம் எங்கள் தலைவனாகிய முருகப்பிரான் எவ்வகைத் தொழிலுக்கும் முற்பட்ட ஆக்கலையும், அளித்தலையும், அழித்தலோடுஞ் செய்து உயிர்களுக்கு நீதியை யருளித் திரோபவத்தினின்றும் நீக்கி அநுக்கிரகம் செய்யாநிற்ப தேவ ஆண்டுகள் பலவும் வந்துவந்து நீங்கின. (வி - ம்.) இந்திர னுலகத்தைக் காக்கின்றா னாதலின் அவனையும் உடன் கூறினார். இதனை "வேந்தனும் வெந்துகெடும்" என்னும் திருக்குற ளுரையானுணர்க. அருளுறுத்தல் - அநுக்கிரகம் செய்தல். (80) |