| | பற்றிக றனக்கொன் றின்றிப் பணிபுரி யடியார்க் கான | | | பற்றிக றழுவி நீக்கும் பராபரக் கடவுட் செவ்வேள் | | | முற்றுமத் தொழிலிற் பட்ட மூதுயிர் பெற்ற பேற்றை | | | இற்றெனக் கிளக்க லாமே யெஃகறி வுடையோர்க் கேனும். |
(இ - ள்.) வெறுப்பினையும் விருப்பினையு மியல்பாகத் தன்பாலொரு சிறிதுமில்லாமல், தன் திருவடித் தொண்டினையாற்று மடியார் கண் மாட்டுளவாகிய விருப்பு வெறுப்பினைத் தானேன்றுகொண்டு (அவர்கள் பாலொரு சிறிதுமவைக) ளிலவாம்வண்ணம் செய்த எல்லார்க்கு மேலாகிய முருகக்கடவுள் தொடங்கிய அப்படைப்புத் தொழிலின்கட் பொருந்திய பெருமையையுடைய உயிர்கள் அடைந்த பயனைக் கூரிய மதியான் வாய்ந்தவர்களாயினும் இத்தன்மையுடையதென்று சொல்ல முடியாது. (வி - ம்.) பற்று இகல் - விருப்பு வெறுப்பு. முற்றுதல் - தொடங்குதல். முதுமை - ஈண்டு பெருமையை யுணர்த்தி நின்றது. இற்று - இத்தன்மைத்து. ஏகாரம் - எதிர்மறை. "எல்லா வுருபொடும் கொள்வோ னெழுமே" என்ற தொல்காப்பியச் சூத்திர விதிப்படி மூதறிவுடையார்க்கு என்னும் கோடற்பொருள் எழுவாய்க்கண் வந்தது. (83) | | கண்டவர் பிறவி மாய்க்குங் கமண்டல மக்க மாலை | | | கொண்டிரு கரத்துச் சார்வோர் கொடும்பய மொதுக்கி நல்க | | | ஒண்டொடிக் கமலச் செங்கை யோரிரண் டமைத்தவ் வாற்றின் | | | விண்டலர் கடப்பந் தாரான் வீற்றிருந் தருளு நாளில். |
(இ - ள்.) தன்னைத் தரிசித்தவர் பிறவியைக் கெடுக்கின்ற கரகமும், உருத்திராக்கமாலையும், இரண்டு திருக்கரங்களிலும் கொண்டு தன்னை யடைந்தவர்களுடைய கொடிய பிறவித்துன்பினை நீக்கி அவர்கள் வேண்டும் வரங்களையளிக்க ஒள்ளிய வீரவளையினை யணிந்த தாமரை மலர்போன்ற சிவந்த இரண்டு திருக்கரங்களை யமைத்து அவ்வனுக்கிரகம் செய்யும் தன்மையிலே முகைநெகிழப் பெற்று மலர்ந்த கடப்பமாலையை யணிந்த முருகக்கடவுள் வேறொருவர்க்கில்லாத சிறப்புடனிருக்குங் காலத்தில். (வி - ம்.) கமண்டலம் - கரகம். "நீரறவறியாக் கரகத்து" என்றார் அகநானூற்றினும். நல்க - அநுக்கிரகம் செய்ய. தொடி - வீரவளை. இதனை "தொடியணி தோளன்" என்னுந்திரு முருகாற்றுப்படையடியானுணர்க. அவ்வாறு - அவ்வனுக்கிரகம் செய்யுமுறை. (84) | | பொறிவரிச் சுரும்பு மூசாப் பொலந்தொடை யமரர் விண்ணின் | | | நெறியுளி செங்கோ லோச்சு நெடுந்தகை யுலக முண்ட | | | வெறிகமழ் துளபத் தொங்கல் விண்டுமா தவர்கள் யாரும் | | | செறிகதி ரிமைப்ப வீசுந் தெள்ளொளிக் கயிலை சார்ந்தார். |
(இ - ள்.) பாட்டினைப் பாடுகின்ற பொறிகளையுடைய வண்டுகள் மொய்க்கப்பெறாத பொன்னாலாகிய மாலையினையணிந்த தேவர்கள், தேவ |