பக்கம் எண் :

240தணிகைப் புராணம்

(இ - ள்.) துன்பமாகிய கடலின்கண் மூழ்கிய (தீவினையின் பகுதியவர்களாகிய) எளியேங்களை (த் தங் கருணைக்கையினால்) எடுக்கும் வண்ணம் திருவவதாரஞ் செய்த கடப்பந்தாரினையணிந்த இளைய பிள்ளை யாரைப் பாலனாக எண்ணித் தாமரை மலரின்கண் இருக்கும் பிரமன் தன் அறியாமை பொருந்திய பேதை நீர்மையால் வணங்காது இவண் வந்து (வாயினூலாற் றன்னுடல் உள்ளே யகப்படும் வண்ணம் கூட்டினை யுண்டாக்கி) அக்கூட்டின்கண் (போக்கு வழியறியாது உள்ளே யுயிரைப் போக்கும்) பட்டுப் புழுப்போல வினையினால் விழுங்கப்பட்டு மீண்டனன்.

(வி - ம்.) நீர்மை - தன்மை. ஈங்கு - இக்கயிலைக்கண். உலண்டு தன் வாயாற் றன்மீதே கூட்டினை வழியறியா தியற்றிக் கெடுமாறு போலக் கெட்டானென்பார் "குடம்பையு ளுலண்டு போலக் கோட்படு வினையின்" என்றார். இதனை "வரியுடல் சூழக் குடம்பை நூறெற்றிப் போக்குவழி யறியா துள்ளுயிர் விடுதலின், அறிவு புறம்போய உலண்டதுபோல" எனும் கல்லாடத்தானும்; "வீடுகட்டி மாடுகட்டி மெய்யிறுகக் கட்டும் வினைப், பூடுகட்டி விட்டுப் புறப்படமாட் டாதுலண்டு, கூடுகட்டி யாங்கேயென் கோட்டைகட்டி னேன்கடப்பங், காடுகட்டி யாளுமுக்கட் கட்டித் திரவியமே" எனவரும் மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதியானும் உணர்க.

(88)

 ஆன்வழிக் கொள்ளும் வேத னவன்றனைப் பற்றி வல்லே
 ஈன்வரு கென்ன வீர னெதிருய்ப்ப மறையி னாதி
 ஊன்வளர் பிரண வத்தி னுறுபொருள் வினாவி மொத்தித்
 தேன்வழி மழலைத் தீஞ்சொற் செம்மல்வன் சிறையி லிட்டு.

(இ - ள்.) தேனொழுகுகின்ற இனிமையாகிய மழலைச் சொல்லை யுடைய தலைவனாகிய இளைய பிள்ளையார் அவ்விடத்து வழியே செல்லும் பிரமனாகிய அவனை வீரவாகுதேவர், விரைவிற் கைப்பற்றி இங்கு வருக என்று கூறிய (இளைய பிள்ளையார்) திருமுன்னர்ச் செலுத்த வேதத்தின் முதலாகிய அவ்விடத்துள்ள பிரணவமென்னும் மந்திரத்தின்கண்ணுற்ற பொருளினை வினாவுதல்செய்து (அவன் அதனுண்மைப் பொருள்கூற இயலாமை கண்டு) அடித்துச் சிறையின்கண் வைத்து.

(வி - ம்.) ஆன், ஈன், ஊன் : இடப்பொருளுணர்த்தி நின்றன. வருக என்ன : விகாரம். வீரன் - வீரவாகுதேவர். மறையினாதி ஊன் - வேதத்தின் முதலாகிய அவ்விடம். மொத்தி - அடித்து. வேதனவன்றனை - வேதனாகிய அவனை. "வாளனகண் மடவாளவள்" என்றாற் போலக் கொள்க.

(89)

 ஆங்கவன் படைப்பி னோடு மடிகளெம் பாங்கர் வைத்த
 ஓங்கிய பணியுந் தானே யுஞற்றிவேங் கடத்தில் வைகும்
 ஈங்கிதன் பொருட்டு நின்னை யெய்தினே மென்று போற்றப்
 பூங்குழ லுமையை நோக்கிப் பூரண னவர்க்குச் சாற்றும்.

(இ - ள்.) அப்பிரமனியற்றும் படைத்தற் றொழிலோடும் அடிகள் அடியேமாகிய எங்கள் பானிறுவிய "உயர்ந்த காத்தலழித்தன் முதலிய