பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்241

பணிகளையுந் தானேசெய்து திருவேங்கடமலையின் கண்ணே தங்கியுள்ளான். இவண் இதன்பொருட்டுத் தேவரீரை யடைந்தோமென்று துதிக்கப் பூவையணிந்த கூந்தலோடுகூடிய உமையம்மையாரைப் பார்த்து எங்கும் நிறைந்தவனாகிய இறைவன் அவர்கட்குத் திருவாய் மலர்ந்தருளுவான்.

(வி - ம்.) ஓங்கிய - உயர்ந்த. அடிகள் - சுவாமிகள்.

(90)

 செம்மைய ஞான சத்தித் திருவுருக் கொண்ட செம்மல்
 எம்மின்வே றல்லன் யாமு மவனின்வே றல்லேங் கண்டீர்
 அம்மழ வடிவினான்பா லன்புசெய் தவர்பி ழைத்தோர்
 நம்மடித் தொண்டு செய்தோர் நவைபடப் பிழைத்தோ ராவர்.

(இ - ள்.) செவ்விய ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினின்றும் வேறானவ னல்லன். யாமுமவனினின்றும் வேறாக உள்ளோமல்லோம். அவ்விளமை பொருந்திய வடிவினையுடைய முருகனிடத்தில் அன்பு செய்தவரும், பிழையியற்றியவருமாகிய இவர்கள் நம்மடித்தொண்டு செய்தவரும் (நம்பாற்) பிழையியற்றியவருமாவர்.

(வி - ம்.) அன்பு செய்தவர் நம்மடித்தொண்டு செய்தவரெனவும், அவன்பாற் பிழைத்தவர் நம்பாற் பிழைத்தவரெனவும் கூட்டுக.

(91)

 மிக்கவப் பிழையுட் பட்ட வேதனுக் குறுத்த தண்டம்
 தக்கதே யெவ்வா றன்னோன் றனைச்சிறை விடுவித் திட்டல்
 தொக்குவந் தடுத்தீர் நீயிர் சொல்லுமி னென்னச் செந்தேன்
 நக்கலர் கொன்றை யான்மு னடுங்கிய வுளத்திற் சொல்வார்.

(இ - ள்.) மிகுந்த அப்பிழையின்கட் பொருந்திய பிரமனுக்குச் சேர்ந்த தண்டமானது தகுதியுடையதேயாம். எங்ஙனம் அப்பிரமனைச் சிறையினின்றும் விடுவித்தலாகும். கூடிவந்து பொருந்திய நீவிர் சொல்லுங்களென்று (இறைவன்) திருவாய்மலர்ந்தருளச் செவ்விய தேன் துளிக்கும் வண்ணம் சிரித்தலர்கின்ற கொன்றை மலர்மாலையை யணிந்த சிவபெருமான் முன்னர் நடுக்கமுற்ற வுள்ளத்தோடும் சொல்வரென்க.

(வி - ம்.) உறுத்த - சேர்த்த. விடுவித்திடல், விகாரம் நக்கல் -
விகசித்தல்.

(92)

 பண்டிகந் திருளிற் பட்ட படர்பெரும் பிழையை நீயே
 கண்டொரு செயலு மில்லாக் காலத்துக் கருணை வைத்துக்
 கொண்டிடும் பருவ நோக்கிக் கோணைமெய் யருளிற் றந்த
 அண்டனிப் பிழையுள் வையா தளிப்பதின் றரிது போலும்.

(இ - ள்.) அநாதிக் காலத்திலே (பூமணமும், உடலுயிரும்போல ஆன்மாக்களாகிய எங்களோடு கலந்திருக்கவும் அதனை யறியாது) நீங்கி, ஆணவத்தோடத்துவிதமான துன்பத்தைத் தருகின்ற குற்றத்தைக் கருணையே வடிவமாகிய பெருமானே! கண்ணுற்று அறிவிச்சை