(வி - ம்.) பெயர்ப்ப - நீப்ப. ஏவி - (ஏவலாளரைச்) செலுத்தி. அருளிற்றெல்லாம் என்பது - "வேண்டிற்றெல்லாந் தருமரிசந்தனம்" (நிகண்டு) "உள்ளியதெல்லாம்" (குறள்) என்றாற்போலக் கொள்க. (101) | அங்ஙன மணுக நண்ணி யடியிணை வணங்க லோடும் | | இங்ஙனம் வருத லென்னா வெடுத்தணைத் துச்சி மோந்திட் | | டுங்ஙன மிருவிப் பின்ன ருவனுடைப் பெருமை தன்னை | | எங்ஙன முலகந் தெள்ளு மங்ஙனந் தெளிப்ப எண்ணி. |
(இ - ள்.) அச் சந்நிதிக்கட் குறுகி இரண்டு பாதங்களையும் வணங்கின அளவில் இவ்விடத்து வருக என்று கையாலெடுத்து மார்போடணைத்து உச்சியைமோந்து அவ்விடத்திருக்கச் செய்து பின்னரவனுடைய பெருமையினை யெவ்வண்ண முலகந்தெளியும் அவ்வண்ணந் தெளிவிக்கத் திருவுளங்கொண்டு. (வி - ம்.) வருதல் - வருக : அல்லீற்றுவியங்கோள். உங்ஙனம் - உவ்விடம். இருவி - இருத்தி. தெள்ளும் - தெளியும். தெளிக்க - தெளிவிக்க; விவ்விகுதி தொக்குநின்றது. (102) | முரிதிரை சுருட்டுந் தெண்ணீர் முழங்கிவிண் ணிழியக் கண்டு | | புரிசடைக் கரந்த பெம்மான் புன்னகை முகத்தி னோடுஞ் | | எரியகைந் திலங்கும் வைவே லிருளளை யடுக்கஞ் சூழ்ந்த | | வரைபக விடுக்கும் வென்றி மைந்தனை நோக்கிக் கூறும். |
(இ - ள்.) அலைகளை மடக்கிவீசுகின்ற தெளிந்த கங்கை நதியானது முழக்கங்கொண்டு ஆகாயத்தினின்று மிழிதலைக் கண்ணுற்றுக் கட்டமைந்த சடையினிடத்துக் கரந்த பெருமையையுடைய சிவபெருமான் புன்சிரிப்புடன் கூடிய முகத்தினோடு அக்கினி யெழுந்தாற்போல விளங்கும் கூர்மைபொருந்திய வேற்படையை இருளோடு கூடிய குகைகள் பொருந்திய அரைமலைகள் சூழ்ந்த கிரௌஞ்சமலையானது பிளக்கும் வண்ணம் செலுத்தும் வெற்றியினையுடைய குமாரனைத் திருக்கடைக்கண் சாத்தித் திருவாய் மலர்ந்தருளுவான். (வி - ம்.) தெண்ணீர் - ஈண்டுக்கங்கை. அகைந்து - எழுந்து. அளை - குகை. (103) | அறிவினிற் பெரிய நீரா ரறிந்தரும் பிழைகள் செய்யார் | | அறிவினிற் சிறிய நீரா ரறிந்தறி யாமை யானும் | | செறிபிழை யிழைப்ப அவ்வத் திறத்தின துண்மை நாடிச் | | சிறுமையி னீங்கினோர்கள் செயிர்த்துள வயிரங் கொள்ளார். |
(இ - ள்.) அறிவினாலே பெருந்தன்மை யுடையராகிய பெரியார் அறிந்து செய்தற் கருமையாகிய பிழைகளைச் செய்யமாட்டார்கள். சிற்றறிவினாலிழிந்த தன்மையினை யுடையராகிய சிறியார் அறிந்தானும் அறியாமையானும் மிகுந்த பிழைகளைச் செய்வார்கள். குற்றங்களினின்றும் நீங்கிய பெரியோர்கள் அக்குற்ற வகைகளினுண்மைத் |