தன்மையை (நூன்மறையானும், அனுபவத்தானும்) ஆராய்ந்து கோபித்து உள்ளத்தின்கண் வயிரங் கொள்ளார்கள். (வி - ம்.) இழைப்ப - இழைப்பார்கள். சிறுமையினீங்கினோர் - பெரியோர். (104) | பேதைமைப் பாலி னாதல் பெருங்கிழ மையினா னாதல் | | மேதக நட்டோர் மாட்டும் விரவிடும் பிழைக ளெல்லாம் | | காதுதற் பால வல்ல காதிடிற் கண்ணி னோடி | | நோதக வோச்சி மெல்ல நோன்றவே யெறிகு வாரால். |
(இ - ள்.) அறியாமைப் பகுதியினானாதல், பெரிய நட்பினுரிமையி னானாதல், மேன்மைபொருந்த நட்பினரிடத்துப் பொருந்தும் குற்றங்க ளெல்லாம் ஒறுக்குந் தரமுடையனவல்ல. அவற்றினுக்கொறுக்க வேண்டின் கண்ணோட்டஞ் செய்து வருந்தத்தக்கதாக ஓங்கி மெல்லப் பொறுக்கும் வண்ணம் அடித்தலைச் செய்வார். (வி - ம்.) காதுதற் பாலவல்ல - ஒறுக்கும் பகுதியுடையவல்ல, காதிடின் - தண்டிக்கப்புகின். கண்ணினோடி - கண்ணோட்டஞ்செய்து. நோதக - வருந்த. ஓச்சி - ஓங்கி. நோன்ற - பொறுக்க. "பேதைமை யொன்றோ" எனுந் திருக்குறளின் கருத்தும். "கடிதோச்சி மெல்ல எறிக" என்னும் திருக்குறளின் கருத்தும் "மண்ணோடியைந்த" என்னும் திருக்குறளின் கருத்தும் இச்செய்யுளி னமைந்திருத்தல் காண்க. (105) | பூவணைக் கிழவன் சான்ற புலனகத் தின்மை யாலே | | யோவிய வணக்கத் தோடு மொய்யென நம்பா லுற்றான் | | மேவிய பிழையு மொன்றே விளித்தனை யுணர்த்திப் பின்னும் | | தாவிய வணக்க மன்றே தன்னமே பெரிதாக் கொண்டு. |
(இ - ள்.) தாமரைமலராசனத்தை யுரிமையாகவுடைய பிரமன் உயர்ந்த அறிவு தன்னகத்தில்லாமையானே வணக்கமில்லாமையோடு நம் பக்கலுற்றனன் (அவன் பக்கலிற்) பொருந்திய பிழையுமொன்றேயாம். அதனை அவனையழைத் துணர்த்தினாய் பின்னரும் ஒழிந்த வணக்கஞ் சிறிதை நீ பெரிதாகக்கொண்டு. (வி - ம்.) சான்ற புலன் - உயர்ந்த அறிவு. ஓவிய வணக்கம் - ஒழிந்த வணக்கம்; வணக்கமின்மை. விளித்தல் - அழித்தல். தாவிய வணக்கம் - ஒழிந்த வணக்கம். தன்னம் - சிறிது. உணர்த்தி - உணர்த்தினாய். (106) | துண்டமும் வாயுங் காதுந் துணைக்கணுஞ் சோரி தூங்க | | அண்டமும் பொடிக்கு மாற்ற லருங்கணம் புடைப்ப வேவிக் | | கண்டக நிரைத்தா லன்ன கடும்பர னிரந்த கோட்டம் | | முண்டகத் தவனைப் பன்னாண் முழுத்துய ருழப்ப வைத்தி. |
(இ - ள்.) மூக்கும், வாயும், காதும், இரண்டாகிய கண்களுமாகிய இவற்றின்கண் இரத்தந் தங்க அண்டங்களையும் பொடியாகத்தக்க |