பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்247

வல்லமையையுடைய பூதகணங்களை அடிக்கும்வண்ணம் செலுத்தி முட்களை நிரைத்துவைத்தா லொத்த கடிய பருக்கைக் கற்கள் நிரந்த சிறைச்சாலையின்கண் தாமரை மலரின்கண் எழுந்தருளிய பிரமனைப் பல காலம் மிக்க துன்பினை யனுபவிக்கும்வண்ணம் வைத்தாய்.

(வி - ம்.) துண்டம் - மூக்கு. தூங்க - தங்க. கணம் : இரண்டாவதன் றொகை. கண்டகம் - முள். பரல் - பருக்கைக்கற்கள். கோட்டம் - சிறைச்சாலை. வைத்தி - வைத்தாய். 106, 107 ஆகிய இவ்விரு பாட்டுங்குளகம்.

(107)

 பெருந்தவ முழந்து நம்பாற் பெற்றிடுந் தொழிலு நீயே
 திருந்துறச் செய்தி நன்மை தீமைகண் டருளிக் காத
 இருந்தனம் யாமே யன்றி யிடர்துமித் தின்ப மேய்ப்ப
 வருந்திய தேவர்க் கென்றே வந்தனை நினக்கி தாமே.

(இ - ள்.) பெரிய தவத்தை வருந்திடச்செய்து நம்மாட்டுப்பெற்ற படைத்தற் றொழிலையும் நீயே திருத்தமாகச் செய்தாய். (ஆன்மாக்கள் செய்த) நன்மை தீமைகளையறிந்து (அவற்றிற்குத் தக்கவாறு) அருள் செய்யவும், வருத்தவும் யாம் இருந்தனம். நீ யங்ஙனமின்றி அசுரர்களால் வருத்தமுறுகின்ற தேவர்களுக்கு அவ்வருத்தத்தினைக் கெடுத்து இன்பத்தினைக் கொடுப்பத் திருவவதாரம் செய்தனை நினக்கு இச் செயலாகுமா? ஆகாது.

(வி - ம்.) செய்தி - செய்தாய். அருளிச் சங்கரிக்க யாமிருந்தனம் எனக் கூட்டுக. ஏய்ப்ப - சேர்ப்ப. ஏ - இரண்டில் முன்னையது தேற்றப் பொருளையும் பின்னையது எதிர்மறைப் பொருளையும் தந்து நின்றன.

(108)

வேறு

 என்றுளக் குய்யம்வைத் தெம்பிரா னருளலும்
 நன்றெனக் குமரனு நகைமுகத் துரைசெய்வான்
 அன்றினர்க் காலமா யண்மினர்க் கமுதமாம்
 வென்றியங் கழலினாய் விரகிலா னென்றனை.

(இ - ள்.) நினக்கிச் செயலடாதென்று திருவுள்ளத்தின்கண் (தனதுட்கோளை) மறைவாக வைத்து எம்பெருமான் திருவாய் மலர்ந்தருள நல்லதென்று குமரக்கடவுளும் புன்னகைகொண்ட திருமுகத்தோடு சொல்லத் தொடங்குவான், திருவடியை நீங்கினவர்க்கு நஞ்சமாய் அதனை யடைந்தவர்களுக் கமுதம்போன் றின்பினைச் செய்யும் மேன்மை பொருந்திய வீரக்கழலினை யுடைய எந்தையே! (அப் பிரமனை) நுண்ணறிவில்லாதவ னென்றனை.

(வி - ம்.) குய்யம் - மறை; வஞ்சனையுமாம். அன்றினர்க்கு - நீங்கினவர்க்கு; விரோதித்தவ ரெனினுமாம். "நட்டார்க் கமிர்தொத்து நள்ளார்க்கு நஞ்சொக்குமிவன்" என்னும் சிவஞானபோதச் சிற்றுரை மாம்ரணச் செய்யுளின் கருத்து "அன்றினர்க் காலமா யண்மினர்க்தமுத யுதா வென்றியங்கழலினாய்" என்னுமடியி லமைந்திருத்தலைக் காண்க.