பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்253

 ஒருகையி லக்க மணிவட மொன்றி
           லொளிர்மணிக் கமண்டல மற்றை
 இருகர மபய வரதமா யங்க
           ணிருந்ததே சிகனையன் றுடங்கு
 மருவினர் போற்றி நால்வகைப் பொருளு
           மல்கலி னானுமப் பெயர்த்தாம்
 பொருவிலச் சயில மின்றுநாற் பொருளின்
           புணர்ச்சிக்கு மூலமாய்ப் பொலியும்.

(இ - ள்.) ஒரு திருக்கரத்தில் உருத்திராக்கமாலையும் ஒரு திருக்கரத்தில் ஒளியையுடைய இரத்தினங்களிழைத்த கமண்டலமும் ஏனைய இரண்டு திருக்கரங்கள் அபயமும் வரதமுமாக ஆண்டெழுந்தருளியிருந்த பரமாசாரியனை அப்பொழுது இறைவனுடன் பொருந்திய தேவர்கள் துதித்து உறுதிப்பொரு ணான்கையும் நிறைவடைதற்குக் காரணமாயிருத்தலினாலும் அப்பெயரினை யுடையதாம். ஒப்பில்லாத அத்தணிகைமலை இன்னும் உறுதிப்பொரு ணான்கையு மடைதற்குக் காரணமாக விளங்கும்.

(வி - ம்.) உடங்கு - கூட. மருவினர் : முற்றெச்சம். மல்கல் - நிறைதல். மூலம் - காரணம்.

(123)

 உருவினெஞ் ஞான்று மிளமையிற் றளரா
           வுத்தம னிறைமையெண் குணத்துப்
 பொருளினஞ் ஞான்று முதுமையிற் றளராப்
           பொலிவுகண் டிமையவர் திருமால்
 தருநிழ லரசன் மாதவ ரெல்லாஞ்
           சாமிநா தப்பெயர் கிளந்து
 மருவிய மகிழ்ச்சி திளைத்தன ரப்பேர்
           வழங்குமா லன்றுதொட் டென்றும்.

(இ - ள்.) திருவுருவத்தா லெஞ்ஞான்றும் இளமைப் பருவத்தினின்றுந் துயக்க மடையாத உத்தமனாகிய முருகப்பெருமான் எண்வகைக் குணங்களை யுடைமையான் இறைமைத் தன்மையோடுகூடிய பொருளா யிருத்தலின் அவ்விளமைப் பருவத்தும் பேரறிவுடைமையாந் தன்மையிற் சோர்வடையாத விளக்கத்தைக் கண்ணுற்றுத் தேவர்களும், திருமாலும் கற்பக நீழலின் கண்ணுள்ள இந்திரனும் பெரிய தவத்தினையுடைய முனிவர்கள் எல்லோரும் சுவாமிநாத னென்னும் பெயரைச் சொல்லுதலாற் பொருந்திய மகிழ்ச்சியின்கண்ணே மூழ்கினார்கள். அன்று தொடங்கி யின்றளவும் அப்பெயர் வழங்கும்.

(வி - ம்.) எண்குண முடைமையே இறைமையாதலின் "இறைமை யெண்குண" மென்றார். எண்குணப் பொருளாயிருத்தலினாலே இளமைப் பருவத்தும் பேரறிவிற் றளர்ச்சியின் றென்பார் "முதுமையிற் றளராப்