| கான ரும்பியக டுக்கையுமெ ருக்கு மலையா | | வான வர்க்கரிய நாடகந விற்று வரதன் | | ஞான சத்தியினை நல்கியகு றித்த விழைவின் | | ஆன பத்திமைய கத்தெழவ ருச்ச னைசெய்வான். |
(இ - ள்.) வாசனை தோன்றுகின்ற கொன்றைமலரையும், எருக்க மலரையும் அணிந்து தேவர்களுக்குங் காண்டற்கரிய ஞானநடனத்தைச் செய்கின்ற மேலானவனாகிய சிவபெருமான் ஞானசத்தியாகிய வேற்படையினைக் கொடுக்கக் கருதிய விருப்பா னுளதாகிய பத்தியின் தன்மை உள்ளத்தின்கண் எழுதலால் அருச்சனை செய்யும் பொருட்டு. (வி - ம்.) கான் - வாசனை; காடெனினுமாம். கடுக்கை, எருக்கு ஆகுபெயர், மலையா : வினையெச்சம். வானவர்க்கும் - உம்மைதொக்கது. ஞானசத்தி - வேற்படை. பத்திமை - பத்தியின்றன்மை; இதனைப் "பத்திமையு மடிமையுங் கைவிடுவான் பாவியேன்" எனுந் தேவாரத் திருவாக்கா னுணர்க. எழவென்னும் செயவெனெச்சம் காரணப்பொருட்டு. (3) | வயிர வீட்டிக ணிரைத்தொழுக வைத்த துபொரப் | | பயில்செ ழுங்கதிர் கொழுந்துகொடு பம்பி நிமிரும் | | கயிலை வெற்பினமர் கங்கையைவ ரக்க ருதினான் | | வியனெ டுங்கிரி யடிக்கணெதிர் மேய ததுவே. |
(இ - ள்.) வயிரத்தினாலாகிய ஈட்டியென்னு மாயுதத்தினை வரிசையாக வைத்ததை யொப்பப் பொருந்திய செழித்த கிரணங்கள் கொழுந்து விடுதலால் நிறைந்து உயர்கின்ற கைலைமலையின்கட் டங்கிய கங்காநதியினை வரும்வண்ணம் திருவுளத்தில் நினைத்தனன். அக்கங்கை மிகப் பெரிய தணிகைமலையின் அடிவாரத்தில் எதிரேவந்து பொருந்தியது. (வி - ம்.) ஈட்டி - ஒருவகை யாயுதம். ஒழுக - வரிசையாக. பம்பி - நிறைந்து. (4) | வெள்ளி யங்கிரியின் மீதமர்தி ருத்த மணிகள் | | தெள்ளொ ளிக்கதிர்பி லிற்றுகணி கச்சி லையடி | | நள்ளு கின்றதுந லத்தகயி லைக்கி றைதொமூஉம் | | வள்ளல் வெற்பெனம தித்தடிவ ணக்க நிகரும். |
(இ - ள்.) வெள்ளி வெற்பின்மீது தங்குகின்ற தீர்த்தமானது இரத்தினங்கள் தெள்ளிய ஒளியோடு கிரணங்களை வெளியிடுகின்ற தணிகைமலையடியின் பொருந்துதல் எல்லா நன்மையினையுமுடைய கைலைமலைக்குத் தலைவனாகிய சிவபெருமான் வணங்கும் (அடியார்கள் வேண்டுவனவற்றை வரையாது கொடுக்கும்) வள்ளலாகிய குமரநாயகர் (எழுந்தருளியிருக்கும்) மலையென்று நினைத்துப் பாதத்தை வணங்குதலை யொக்கும். (வி - ம்.) நள்ளுகின்றது : தொழிற் பெயர். மதித்து - நினைத்து. (5) |