நாட்டி ஆவாகனஞ் செய்ய ஆண்டுச் சேறலும், சுறவேறாகிய கொடியைச் செலுத்தலும், நிலங்களின் வளத்தைப் பாதுகாத்தலும் வருணற்குரிய செயலாகலின் நதியுமச் செயலுடைத்தாதல் காண்க. நாகச்சூழல் துன்னுந்தொடர்பு - நதியைக் குறிக்கும்பொழுது புன்னைமரச் சூழலிற் பொருந்துதலெனவும், வருணனைக் குறிக்கும் பொழுது சுறாமுண் மருப்பிற்றான் சேறல் எனவும்; மகரமுந்தல் நதியைக் குறிக்கும்போது மகரமீனைத் தள்ளலெனவும், வருணனைக் குறிக்கும்பொழுது மகரக்கொடியைச் செலுத்தலெனவும்; எந்நிலவளனும் போற்றல் நதியைக் குறிக்கும்பொழுது நான்கு நிலத்தினுஞ் சென்று வளத்தினையுளவாக்கலெனவும், வருணனைக் குறிக்கும்பொழுது ஏனைய நிலத்தினை மழைபெய்வித்துப் பாதுகாத்தலெனவும் பொருள்கொள்க. கானற்பாங்கர் - கடற்கரையோரம்; எதிர் ஏற்று மகரமென மாறுக; ஏற்றுமகரம் அல்வழிக்கண் றகரமிரட்டியது; 'இடுகாட்டு ளேற்றைப்பனை' என்புழிப்போலக் கொள்க. (நாலடி) (27) | | முண்டக நீல ஞாழல் முருகெழ முடியிற் சூடி | | | மண்டிய விலைகைக் கொண்டு வளைமுதல் வேட்டோர்க் குய்த்து | | | மிண்டிமீன் கவர்புள் ளோப்பி வெய்துமிக் கிரக்கங் காட்டித் | | | தொண்டைவாய்ப் பரத்தி மார்தந் தொழின்மையும் பெற்ற தாங்கண். |
(இ - ள்.) அந் நெய்தநிலத்தின்கண் அவ்வெள்ளமானது தன்றலையில் தாழைப்பூவினையும், நீலப் போதினையும் ஞாழற்போதினையும், வாசனை யெழாநிற்க முடியிற் சூடுதலானும், செறிந்த இலைகளை (அலையாகிய) கையாற் பறித்துக்கொள்ளுதலினாலும், சங்கின முதலியவற்றை விரும்பிக் கொள்வார்க்குச் சிதறுதலானும் நெருங்கிய மீனைக் கவர்கின்ற புட்களை ஓடச் செய்தலானும் கொவ்வைப் பழம்போன்ற அதரத்தினையுடைய பரத்திமார்தன் றொழிலின் றன்மையையும் பெற்றது. (வி - ம்.) மலர் முதலியவற்றைச் சூடி விலைப்பொருளுக்குச் சங்கு முதலியவற்றை மாற்றிப் ள்ளோப்பி நாயகர் பிரிந்தமைக்கு இரங்கல் பரத்திமார் தொழிலாகலின் அத்தொழிலை நதியுமுடைத்தாதல் காண்க. மண்டிய விலையென்பதற்கு நதியைக் குறிக்கும்பொழுது செறிந்த இலையெனவும், மாதரைக் குறிக்கும்பொழுது விலைப்பொருளெனவும்; இரக்கங் காட்டியென்பதற்கு நதியைக் குறிக்கும்பொழுது ஒலியுண்டாக்கியெனவும், மாதரைக் குறிக்கும்பொழுது அந்நிலத்தின் உரிப் பொருளாகிய இரங்கல் எனவும் பொருள்கொள்க. ஞாழல் நெய்தநிலக் கருப்பொருளாகிய ஒருவகை மரம். 'ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்' என்றார் குறுந்தொகையிலும். (28) | | கடுங்களி யுப்பு மெத்திக் கழிபல வுழக்கி நீந்தி | | | நெடுங்கடல் குளித்துக் கீழ்நீர் நித்திலந் துவர்மே லாக்கிப் | | | படுங்கலன் பலவுந் தள்ளிப் பரத்தியர் தோயப் புல்லிக் | | | கொடுங்கொலைப் பரவ மாக்கள் கொள்கையுங் கெழீஇய தாங்கண். |
(இ - ள்.) அந் நெய்தநிலத்து அவ்வெள்ளமானது கடிய களி மண்ணோடு கலந்த உப்பை மிகச் செய்தலானும் பல உப்பங்கழிகளைக் |