நிழலைச் செய்யும் மிக்க தண்ணீர் (மனமொழி மெய்களொன்று பட்டுச் செய்யும்) தொழிலான் மேன்மைபொருந்திய பொருள் கிழக்கிடும் பொருளாகவும், கிழக்கிடத்தக்க பொருள் மேலாந்தன்மையை யடையத்தக்க செய்கையையுடையனவாகவும் பிறர்க்கறிவிக்கும் ஒரு கரியை யொக்கும். (வி - ம்.) தண்ணீரிடத்தொரு பொருளைக்காட்டின் தலைகீழாகத் தோன்றலும்,தலைகீழாகக் காட்டின் தலைமேலாகத் தோற்றலு மியற்கை யாகலின், "மேலவாந்தலைய கீழ்த்தலைய கீழ்த்தலையன - மேலவாகு நிழ றோற்றுவிரிநீர்" என்றார். கிழக்கு - கீழ். இதனை முன்னர்க் கூறினாம். ஆண்டுக் காண்க. வினை - மனமொழி மெய்யொன்றுபட்டுச் செய்யும் வினை; சான்று - கரி. விழையும் - ஒக்கும். நிழல் - சாயை; இதனை " நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை" என்னும் நிகண்டா னறிக. பின் இரண்டடிக்கும் "புண்ணியம் பாதகமாகப் போற்றிய" என்னுஞ் செய்யுளின் கருத்தைக்கொள்க.இஃதுஉவமையணி. (10) | காத ரந்தபவி ளங்குகணி காச லநிழல் | | போத வுட்பொதி திருத்தமொளி பொங்கு வரையை | | மாத வத்துறுதி யானவழி யான்ம னமிசை | | ஆத ரத்தமர வைத்தமைவு பெற்ற துறழும். |
(இ - ள்.) கண்டோர் பிறவித்துன்பம் நீங்க விளங்குகின்ற தணிகைவரையின் நிழலை மிகத் தன்னுட்கொண்ட தீர்த்தமானது ஞான ஒளி தழைக்கின்ற அத்தணிகைமலையைப் பெரிய தவத்தினிடத்துப் பொருந்துகின்ற தியானமுறையான் மனத்தின்கண் அன்பினாற்றங்கச் செய்து அமைதிபெற்றதை யொக்கும். (வி - ம்.) காதரம் - துன்பம். இதனைத் "தேங்கிய காதர வாதரஞ் செப்பித்தன்" என்னுந் தஞ்சைவாணன்கோவை (5) செய்யுளா னறிக. ஆதரம் - அன்பு. உறழும் - ஒக்கும். (11) | ஓங்கு தூவிகைய மாடநிழல் செய்ய வுதன்மேல் | | பாங்கர் நீள்பொழின்ம துப்புனல்ப னிப்ப தவைசேர் | | தீங்கு தீர்த்திடுப திட்டைதெளி யாடி யினிடைத் | | தாங்கி வார்புனல்பொ ழிந்துபுரி தன்மை நிகரும். |
(இ - ள்.) உயர்ந்த தூவிகையை யுடையனவாகிய கோவில் (நீரினிடத்து) நிழலைச்செய்ய அந்நிழலின்மேல் (அத்தடாகத்தின்) பக்கலிலுள்ள நீண்ட சோலைகள் தேனாகிய நீரைத்துளித்தல் அச்சோலைகள் பொருந்தும் பிறவித்துன்பத்தை நீக்குகின்ற (ஈசுரப்) பிரதிட்டை செய்த தெளிந்த கண்ணாடியிடத்து (கையால்) தாங்கி மிக்கபுனலை அபிடேகம் செய்து (வந்தனை) செய்கின்ற தன்மையை யொக்கும். (வி - ம்.) தூவிகை - கோபுரத்தின்மேலுள்ள கலசம். மாடம் - கோவில் இதனை "ஏறுயர்த்த செங்கணார்க் கெழுபது மாடஞ் செய்தலான்" என்னும் பெரிய திருமொழியானுணர்க. நிழல் - சாயை; முன்னர்க் கூறினாம். உதன்மேல் - அச்சாயைமேல். பனிப்பது - துளிப்பது : |