தொழிற்பெயர். அவை - சோலை. பதிட்டை - பிரதிட்டை. புரி : வினைத்தொகை. தூவியையுடையனவாகிய மாடநிழல் செய்ய அவைபுரி தன்மையென வினை முடிவு செய்க. (12) | நின்றி ருந்துகிடை யுற்றுநிகழ் வேள்வி யினிடை | | மன்ற பன்முறைவ ருந்துவது தீர ழுழுகி | | ஒன்றி ருந்தவமு ஞற்றுபல வங்கி யுறழும் | | துன்று தூவிகளி னேற்றுசுடர் தோற்று வனவே. |
(இ - ள்.) ஒன்றினோடொன்று நெருங்கியுள்ள கோபுரத்தூவிகளின் ஏற்றிய விளக்குகள் அந்நீருட்டோற்றுவன; நிற்றலையும், இருத்தலையும், கிடத்தலையும் பொருந்திச் செய்யத்தக்க வேள்வியினிடத்து நிச்சயமாகப் பன்முறை வருந்துதல் நீங்கும்வண்ணம் அந்நீரின் மூழ்கி மனமொருங்குதற் கேதுவாகிய பெரியதவத்தைச் செய்கின்ற பல அக்கினியை யொக்கும். (வி - ம்.) அங்கியை - நின்ற பாவனையாகவும், இருந்த பாவனையாகவும், கிடந்தபாவனையாகவும் வைத்து யாகஞ்செய்தல் வழக்காறாகலின் "நின்றிருந்து கிடையுற்று நிகழ்வேள்வி" என்றார். ஒன்றியவிருந்தவம் - விகாரம். சுடர் - விளக்கு. (13) | தூவி வெண்குருகு தோற்றுகுர னூபு ரமென | | மேவ வாளைநெடு மீனம்வெடி போய்வி "வன | | காவி நேர்விழிய கூத்தியர்க தித்த சதியில் | | தாவி யந்தரம றிந்துவரு தன்மை புரையும். |
(இ - ள்.) இறகினோடு கூடிய வெள்ளிய அன்னங்கள் தோற்றுவிக்கிற சத்தங்கள் (மாதர் காலின்கண்ணுள்ள) சிலம்பொலிபோலப் பொருந்த, வாளைமீனும் ஏனைய நீண்ட மீன்களும் மேலே துள்ளிப் போய்க் கீழே விழுவன நீலோற்பல மலரையொத்த கண்களையுடைய நடனமாதர் எழுந்த தாள வொற்றிற்கேற்ப ஆகாயத்திலே தாவி மடங்கி வருகின்ற தன்மையை ஒக்கும். (வி - ம்.) தூவி - இறகு. குருகு - ஈண்டன்னம். அன்னத்தின் குரல் சிலம்பொலி போன்றிருக்குமென்பதனை "பொருந்துறாதனம் பூஞ்சிலம் பார்ப்பறக் - கரந்து தம்முயிர்க் காதலர்பாற் செல்வார்" என்னும் நைடதச் செய்யுளானறிக. வாளை நெடுமீனம் - உம்மைத்தொகை. வெடிபோதல் - மேலே துள்ளல். கதித்த - எழுந்த. சதி - தாளஒற்று. அந்தரம் - ஆகாயம். (14) வேறு | பெருகிய வித்தகு வளத்திற் பெட்புறீஇக் | | கருவினை தபுங்கயி லாய கங்கையை | | வருகென வழைத்தவன் மறுவின் மாயையின் | | பொருவில்பல் பொருள்களும் பூத்திட் டானரோ. |
|